பதிவு செய்த நாள்
26 மே2011
11:20
புனே : இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான வாஸ்கான் இஞ்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவன நிகரலாபம் 81.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வாஸ்கான் இஞ்ஜினியர்ஸ் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நிறுவன நிகரலாபம் 81.8 சதவீதம் அதிகரித்து ரூ. 28.7 கோடியாக பதிவாகி உள்ளது. அதேபோல், நிகர வருமானமும், கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தை ஒப்பிடும்போது, 65 சதவீதம் அதிகரித்து ரூ. 406 கோடியாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிகளுக்கு பிந்தைய நிகரலாபம் 23.6 சதவீதம் அதிகரித்து ரூ. 65.9 கோடி என்ற அளவிலும், வருமானம் 37 சதவீதம் அதிகரித்து ரூ. 1054.3 கோடி என்ற அளவிலும் பதிவாகி உள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|