பதிவு செய்த நாள்
29 மே2011
11:00
புதுடில்லி : 2010-11ம் நிதியாண்டில் இந்தியாவில் வெங்காய ஏற்றுமதி 31 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டில் 12.89 மில்லியன் டன் வெங்காயம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி பாதிப்பு மற்றும் ஆண்டின் இறுதியில் வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது உள்ளிட்ட காரணங்களால் ஏற்றுமதியின் அளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009-10 ம் ஆண்டில் இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி 18.73 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. முக்கிய வெங்காய உற்பத்தி பகுதிகளான மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அக்டோபர் முதல் நவம்பர் மாதங்களில் காலம் தவறி பெய்த மழையும் இந்த ஏற்றுமதி சரிவிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2010 ம் ஆண்டின் இறுதியில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.70 முதல் 85 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|