பதிவு செய்த நாள்
29 மே2011
16:19
கொழும்பு : டாடா மோட்டார்ஸ் தனது உலகின் விலை குறைந்த காரான நானோ கார் விற்பனையை தற்போது இலங்கையில் துவக்கி உள்ளது. அங்கு நானோ காரின் விலை இந்தியாவை விட 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நானோ கார் ஒன்றின் விலை ரூ.9.25 லட்சம் என அறிவிக்கப்பட்ட பின்னரும் முன்பதிவு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருவதாக இலங்கையில் உள்ள டாடாவிற்கான டீசல் மற்றும் மோட்டார் இன்ஜியரிங் நிறுவன ஏஜெண்ட் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்கள் முன்பதிவின் போது ரூ.ஒரு லட்சம் செலுத்துவதாகவும், இவர்களுக்கு 2 வாரங்களில் கார் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், அதன் பின்னர் முழுத் தொகை பெறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், ஏசி வசதி உடனான காரின் விலை ரூ.1.1 மில்லியன் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|