பண்டிகை காலங்கள் வரவுள்ளதால் விசைத்தறி, நூற்பாலை தொழில் சூடுபிடிக்கும்பண்டிகை காலங்கள் வரவுள்ளதால் விசைத்தறி, நூற்பாலை தொழில் சூடுபிடிக்கும் ... ஜி.கே.இண்டஸ்ட்ரியல் பார்க் ரூ.250 கோடியில் தொழில் வளாகம் ஜி.கே.இண்டஸ்ட்ரியல் பார்க் ரூ.250 கோடியில் தொழில் வளாகம் ...
உலக பங்குச் சந்தைகளால் சரிவு நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2011
04:21

இந்த வாரம் தொடக்கம், இந்திய சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது. இருப்பினும், வார இறுதியில், சரிவு நிலை காணப்பட்டது. ஜெ.பி.மார்கன் நிறுவனம், நடப்பு 2011ம் ஆண்டு இறுதிக்குள், 'சென்செக்ஸ்' 21,000 புள்ளிகள் வரை செல்லும் என, மதிப்பீடு செய்திருந்தது. இதனால், புதன்கிழமையன்று, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 115 புள்ளிகள் வரை உயர்ந்திருந்தது.இந்நிலையில், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களில், நாட்டின் பங்கு வர்த்தகம், வீழ்ச்சி கண்டது. அமெரிக்காவில் வேலை வாய்ப்பு பிரச்னையாலும், உள்நாட்டில் தொலைத்தொடர்புத் துறையில் வேறொரு ரூபத்தில் பிரச்னை வெளியானதாலும், பங்கு வர்த்தகம் வெள்ளிக் கிழமையன்று, 117 புள்ளிகள் சரிவடைந்து, 18,376 புள்ளிகளில் நிலை பெற்றது. அன்றைய தினம், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 33 புள்ளிகள் குறைந்து, 5,516 புள்ளிகளில் நிலை கொண்டது. இருப்பினும், ஒட்டு மொத்த அளவில், முந்தைய வாரத்துடன் ஒப்பிடும் போது, 'சென்செக்ஸ்' 110 புள்ளிகளும், 'நிப்டி' 41 புள்ளிகளும் உயர்ந்திருந்தன. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை: இம்மாதம் 16ம் தேதி வெளியாக உள்ள ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை எப்படி இருக்குமோ என்ற அச்சப்பாடும், சந்தையில் உள்ளது. சென்ற மாதம், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி வீதத்தை 0.25 சதவீதம் தான் உயர்த்தும் என்ற நிலைப்பாடு இருந்தது. ஆனால், 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டது. எனவே, மீண்டும் வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட மாட்டாது என, ஒரு சாரார் கூறுகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், கடந்த ஆண்டுகளைப் போல் இருக்காது என்று கூறப்படுகிறது. கோத்ரெஜ் நிறுவனம்: கோத்ரெஜ் நிறுவனம், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்குவதில், அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது. தற்போது, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த டார்லிங் குழுமத்தின் 51 சதவீத பங்குகளை வாங்க முடிவு செய்துள்ளது. பெட்ரோல் விலை: ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, தற்போது 70 ரூபாய் என்ற அளவில் வந்து நிற்கிறது. கடன்க ளுக்கான வட்டி விகிதங்களும் கூடியுள்ளன. இவையெல்லாம் சேர்ந்து, கார்களின் விற்பனையை குறைத்துள்ளன. ஆனால், கார்களின் விலை ஏனோ குறைக்கப்படவில்லை.ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமியால், அந்நாட்டில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, உதிரி பாகங்கள் இறக்குமதியும் மிகவும் குறைந்துள்ளது. இதனால் தான், கார்களின் விலை குறையவில்லை என கூறப்படுகிறது. கார்களின் விலையில், தள்ளுபடி அறிவிப்புகளும் இல்லை. 'வாங்கினால் வாங்குங்கள்; இல்லாவிட்டால் போங்கள்' என்ற எண்ணம் தான், இத்துறை நிறுவனங்களிடம் உள்ளன. எந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம்? இன்செக்டிசைட்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்குகள், அண்மை காலமாக, தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. குறிப்பாக, 75 ரூபாய் என்ற அளவில் இருந்த இதன் பங்கின் விலை, தற்போது 300 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், பாட்டா, தாபர் இந்தியா, பெட்ரோ நெட், டைம் டெக்னோ ப்ளாஸ்ட், கோல் இந்தியா ஆகிய நிறுவனப் பங்குகளை வாங்கி, உங்கள் பங்கு தொகுப்பில் சேர்த்துக் கொள்ள லாம். புதிய வெளியீடுகள்: பெரிய அளவில் புதிய பங்கு வெளியீடுகள் ஏதும் இல்லை என்ற போதிலும், சிறிய நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்கி பங்கு வெளியீடுகளை மேற்கொண்டு வருகின்றன.டிம்பர் ஹோம்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடு, மே 30ம் தேதி தொடங்கி, ஜூன் 2ம் தேதி முடிவடைந்தது. இத்தாலிய தொழில்நுட்பத்தில், 'மாடுலர் கிச்சன்' தயாரிக்கும் இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, ஒட்டுமொத்த அளவில் 5.78 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன. சிறிய முதலீட்டாளர்கள் பகுதிக்கு, 14.22 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன.வி.எம்.எஸ்., இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய வெளியீடும், மே 30ம் தேதி தொடங்கி, ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைந்தது. கப்பல் துறையைச் சார்ந்த இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 1.36 மடங் குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன. சிறிய முதலீட்டாளர்கள் பகுதிக்கு, 3.41 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.இந்நிலையில், பிர்லா பசிபிக் மெட்ஸ்பா என்ற மருத்துவத் துறையைச் சேர்ந்த நிறுவனத்தின் பங்கு வெளியீடு, வரும் 20ம் தேதி தொடங்கி, 23ம் தேதியுடன் முடிவடைகிறது. வரும் வாரம் எப்படி இருக்கும்? வியாழக்கிழமையன்று, அமெரிக்காவில் வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்ற அறிவிப்பு வெளியானது. இதனால், அந்நாட்டு பங்குச் சந்தைகளில், வர்த்தகம் 2 சதவீதம் வரை குறைந்திருந்தன. இதனால், இந்தியா மட்டுமின்றி, இதர ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கம் கண்டது. மேற்கண்டவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், வரும் வாரத்திலும், சந்தை அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்படும் அல்லது இதை விட குறையவும் வாய்ப்புள்ளது. - சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)