பதிவு செய்த நாள்
05 ஜூன்2011
16:36
புதுடில்லி : நாட்டின் கோதுமை உற்பத்தி 18 சதவீதம் அதிகரித்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 26.43 மி்ல்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டு, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் 22.41 மில்லியன் டன் கோதுமை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதாக இந்திய உணவு உற்பத்தி கழகம் தெரிவித்துள்ளது. 2011-12ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதத்தில் 84.27 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பஞ்சாப் மாநிலத்தில் 10.92 மில்லியன் டன்னும், அரியானாவில் 6.87 மில்லியன் டன்னும் கோதுமை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் முறையே 4.81 மில்லியன் டன், 2.42 மில்லியன் டன், 1.11 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி செய்யபப்டடுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|