பதிவு செய்த நாள்
07 ஜூன்2011
10:38
புதுடில்லி : வென்டோ டீசல் வேரியண்ட் காரின் விலையை 2.2 சதவீதம் வரை அதிகரிக்க வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கார் தயாரிப்பதற்கான உற்பத்திப் பொருட்களின் விலையேற்றத்தை அடுத்து, இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு, ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்போதைய அளவில் வென்டோ டீசல் வேரியண்ட் கார் ரூ. 7.99லட்சம் மற்றும் ரூ. 9.24 லட்சமாக உள்ளது. பெட்ரோல் வேரியண்ட் கார் ரூ.6.99 லட்சம் மற்றும் ரூ. 9.22 லட்சம் என்ற அளவில் உள்ளது. பெட்ரோல் வேரியண்ட் வென்டோ காரின் விலை தற்போது உயர்த்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2.2 சதவீத விலை அதிகரிப்பின் மூலம், ரூ. 20 ஆயிரம் வரை அதிகரிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|