பதிவு செய்த நாள்
13 ஜூன்2011
15:47
இந்தியாவில், 'யுடிலிட்டி வைக்கிள்' என்று அழைக்கப்படும் அளவில் பெரிய கார்களின் விற்பனையில் முன்னணியில் இருப்பது மஹிந்திரா நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில், கடந்த 2009ம் ஆண்டு ஸைலோ என்ற பெயரில், ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ.8 லட்சம். டொயோட்டோவின் இன்னோவா, டாடா மோட்டார்ஸின் ஆரியா ஆகிய கார்களுக்கு, ஸைலோ கடும் போட்டியை அளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், மினி ஸைலோவை இன்னும் சில மாதங்களில் மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் விலை ரூ.5 லட்சத்துக்கும் குறைவாகவே இருக்கும். டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனம், மாருதி சுசூகியின் ஸ்விஃப்ட் மற்றும் ஹுண்டாயின் ஐ20 கார்களுக்கு போட்டி தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|