பதிவு செய்த நாள்
14 ஜூன்2011
12:57
மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஐடியா செல்லுலார் நிறுவனம், இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் நிறுவன நிகரலாபம் 12.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009-10ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் ரூ. 243 கோடியாக இருந்த நிறவன நிகரலாபம், இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 12.9 சதவீதம் அதிகரித்து ரூ. 274.5 கோடியாக பதிவாகி உள்ளது. அதேபோல, நிறுவனத்தின் வருமானமும் ரூ. 3,955.56 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 4,234.7 கோடிகளாக அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும், 2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த இந்த ஆண்டில், நிறுவனத்தின் நிகரலாபம் ரூ. 953.9 கோடி என்ற அளவிலிருந்து ரூ. 898.7 கோடியாக சரிவடைந்துள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|