பதிவு செய்த நாள்
20 ஜூன்2011
14:39
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஃபோர்டுக்கு, சென்னை அருகே மறைமலைநகரில், தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில் தற்போது என்டோவர் என்ற எஸ்.யு.வி., கார் மற்றும் ஃபியஸ்டா கிளாஸிக், ஃபிகோ ஆகிய மாடல் கார்களை, ஃபோர்டு நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை அருகே உள்ள தொழிற்சாலையில், ஃபியஸ்டா கார் உற்பத்தியை, ஃபோர்டு நிறுவனம் சில நாட்களுக்கு முன் துவக்கியுள்ளது. ஏற்கனவே, சீனா, ஜெர்மனி, ஸ்பெயின், மெக்ஸிகோ மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தொழிற்சாலைகளில், ஃபியஸ்டா கார் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தொழிற்சாலையில், புதிய ஃபியஸ்டா காருக்கு தேவையான1.5 லிட்டர் டிஐ- விசிடி பெட்ரோல் மற்றுறும் துராடரக் டீஸல் இன்ஜின்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் டீஸல் இன்ஜின் உற்பத்தி செய்ய, ரூ.325 கோடியை, ஃபோர்டு நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் ஃபியஸ்டா கார், இந்த ஆண்டு இறுதியில் இருந்து விற்பனைக்கு வரும் என்று ஃபோர்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|