பதிவு செய்த நாள்
21 ஜூன்2011
09:23
மும்பை : சர்வதேச அளவில், ஒரிஜினல் உபகரணங்கள் தயாரிப்பாளர் வரிசையில், மொபைல்போன் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் , முதல் 5 இடத்திற்குள் வர ஹூவாவே நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியச் சந்தையில் ஹூவாவே இந்தியா நிறுவனம், ஐடியோஸ் எக்ஸ்5, ஐடியோஸ் எக்ஸ்2, ஐடியோஸ் சாட் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. இந்தியா மற்றும் சர்வதேச அளவில், ஐடியோஸ் ஸ்மார்ட்போனிற்கு ஏற்பட்ட வரவேற்பை அடுத்து இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இளைய தலைமுறையினரை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஐடியோஸ் எக்ஸ்5 ( யூ 8800) ஸ்மார்ட்போன் தகவல்தொழில்நுட்பத்தினரை கவரும் வகையிலும், டச்ஸ்கிரீன் உடனான மெல்லிய ஐடியோஸ் எக்ஸ்2 (யூ8500) , ஐடியோஸ் சாட் (யூ8300) இளைய தலைமுறையினரை கவரும் வகையில் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இளைய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை பெரிதும் கவரும் வகையில், கம்ப்யூட்டரை விட அதிவேகமாக செயலாற்ற உதவும் ஸ்வைப் தொழில்நுட்பம், 3.8 இஞ்ச் டபிள்யூவிஜிஏ டச் ஸ்கிரீன், 5 மெகாபிக்சல் கேமரா, இந்தியாவின் முதல் ஹை-டெபனீசன் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்ற ஐடியோஸ்எக்ஸ்5 ஸ்மார்டபோனின் விலை ரூ. 14,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டம், பரீ லோடட் செய்யப்பட்ட பேஸ்புக், டுவிட்டர், கூகுள் மொபைல் சூட், இன்-பில்ட் மியூசிக் பிளேயர், 3.5 மிமீ் ஹெட்போன், 3.2 மெகாபிக்சல் கேமரா, எப்எம் ரேடியோ உள்ளி்ட்ட வசதிகளுடனான ஐடியோஸ் எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 8,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆண்ட்ராய்ட் 2.1 ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் சாட் செய்வதற்கு வசதியாக ஸ்மைலி, கூகுள் சர்ச், இ-மெயிலுக்கான குறியீடு உள்ளிட்ட சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஐடியோஸ் சாட் போனின் விலை ரூ 8,199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐடியோஸ் எக்ஸ்2 ஸ்மார்ட்போன், நீண்டநேரம் உழைக்கக் கூடிய 1150 எம்ஏஹெச் பேட்டரீ, இந்த பேட்டரி பிராக்சிமிட்டி சென்சார் ஆகவும், கண்களுக்கு பாதுகாப்பான வகையிலான ஆம்பியன்ட் லைட் சென்சார் சிறப்பம்சத்தை கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|