உணவுப்பணவீக்கம் அதிகரிப்புஉணவுப்பணவீக்கம் அதிகரிப்பு ... கரோலா ஆல்டிஸ் புது வேரியன்ட் அறிமுகம் கரோலா ஆல்டிஸ் புது வேரியன்ட் அறிமுகம் ...
வோக்ஸ்வாகன் விற்பனை மே மாதத்தில் 244 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2011
14:31

மும்பை : சர்வதேச அளவில் கார்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் உள்ள வோக்ஸ்வாகன் நிறுவனத்தி்ன் இந்திய அங்கமான வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம், மே மாதத்தில் விற்பனை 244 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வோக்ஸ்வாகன் குரூப் சேல்ஸ் இந்தியா நிறுவன உயர் அதிகாரி நீரஜ் கார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த ஆண்டின் மே மாதத்தில், தங்கள் நிறுவனம் 6,185 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 1,796 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இது சதவீதத்தின் அடிப்படையில் 244 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் மே மாதத்தில், போலோ மற்றும் வென்டோ கார்கள் 5,889 என்ற அளவிலும், புளூமோஷன் தொழில்நுட்ப அடிப்படையிலான பசாட் கார்கள் 184 என்ற அளவிலும் விற்பனையாகி உள்ளது. இந்தாண்டின், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், 33,958 கார்கள் விற்பனையாகி உள்ளதாகவும், கடந்தாண்டின் இதேகாலகட்டத்தில் 32,627 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருந்ததாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் நிறுவன விற்பனை அதிகரித்திருப்பது மக்களிடையே தங்கள் நிறுவனத்திற்கு உள்ள நன்மதிப்பை காட்டுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)