ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம்ஏற்றத்துடனேயே முடிவடைந்தது பங்குவர்த்தகம் ... வங்கிகள் வழங்கிய கடன் 21 சதவீதம் அதிகரிப்பு வங்கிகள் வழங்கிய கடன் 21 சதவீதம் அதிகரிப்பு ...
நேற்று கூகுள் பிளஸ், இன்று பேஸ்புக் கிரெடிட் : அசத்தும் வலைதளங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
16:50

புதுடில்லி : சோஷியல் நெட்வொர்க் தளங்களில் முடிசூடா மன்னனாக விளங்கும் ‌பேஸ்புக், இந்திய பயனாளர்களுக்கு வசதியாக 'பேஸ்புக் கிரெடிட்ஸ்' என் ‌பேமெண்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை இந்திய பயனாளர்கள் விர்சுவல் கரன்சியாக பயன்படுத்தி பல்வேறு அப்ளிக‌ேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பா‌க, பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளதாவது, இந்தியாவில் இந்த புதிய பேஸ்புக் கிரெடிட்ஸ் ‌பேமெண்ட் முறை, நாளை (ஜூலை 1ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த முறை அறிமுகப்படுத்ப்பட்டு பெரும் வெற்றி பெற்றுள்ளது எனவும், இந்த வெற்றியைத் தொடர்ந்தே இந்தியாவிலும் இந்த முறையை அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த புதிய சேவையின் மூலம், 2.5 கோடி பயனாளர்கள் பயன்பெற உள்ளனர். இந்த சேவை, பயன்படுத்துவதற்கு எளிதாகவும், அதேசமயம் விரைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் கிரெடிட்டை பயனாளர்கள் ஒருமுறை இவர்கள் பெற்றவுடன், அவர்கள் அதை, பல்வேறு நவீன தொழில்நுட்பத்திலான அப்ளிகேசன்கள் மற்றும் விளையாட்டு தொகுப்புகளை பாதுகாப்பான முறையில் வாங்குவதற்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். பேஸ்புக்கிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் கூகுள் பிளஸ் என்ற சோஷியல் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ள நிலையில், பேஸ்புக்கும் தன்பங்கிற்கு பேஸ்புக் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூகுள் பிளஸ்: இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம், பேஸ்புக்கிற்கு போட்டியாக 'கூகுள் பிளஸ்' என்ற சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது, சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு க‌ாட்டி வருகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக, சோஷியல் ‌நெட்வொர்க் தளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது 'கூகுள் பிளஸ்' என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சோஷியல் நெட்வொர்க் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த புதிய சோஷியல் நெட்வொர்க் தளம், பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும், அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை, ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‌மொபைல்போன்கள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில், சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும், வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் 'தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்)' சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப்போல, தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல், உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழி்ல்நுட்பமுறையில் இங்கு போட்டோக்கள் அப்லோட் செய்யப்பட உள்ளதால், இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது. இது, இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலம‌ே சாத்தியமாகி உள்ளத‌ாக அவர் அதில் தெரிவித்துள்ளார். 600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு, தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)