கரும்பு வரத்து குறைந்ததால் நாட்டு சர்க்கரை உற்பத்தி முடக்கம்கரும்பு வரத்து குறைந்ததால் நாட்டு சர்க்கரை உற்பத்தி முடக்கம் ... பரஸ்பர நிதி நிறுவனங்கள்ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த ஆர்வம் பரஸ்பர நிதி நிறுவனங்கள்ஓய்வு கால பரஸ்பர நிதி திட்டங்களை அறிமுகப்படுத்த ... ...
உணவு பொருள் பணவீக்கம் 7.78 சதவீதமாக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2011
23:54

புதுடில்லி: நாட்டின் உணவுப் பொருள் பணவீக்கம், ஜூன் 18ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.78 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தை விட 1.35 சதவீதம் (9.13 சதவீதம்) குறைவு. மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில், கணக்கிடப்படும் உணவுப் பொருள் பணவீக்கம், மிகவும் குறைந்ததற்கு, காய்கறிகள், பருப்பு வகைகள் போன்றவை குறைந்ததுதான் முக்கிய காரணம். சென்ற ஆண்டு இதே வாரத்தில், உணவுப் பொருள் பணவீக்கம், 20 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வாரத்தில், கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, பருப்பு வகைகள் விலை, 9.50 சதவீதம் குறைந்திருந்தது. காய்கறிகள் விலை, 10.08 சதவீதம் சரிவடைந்திருந்தது. குறிப்பாக,உருளைக்கிழங்கு விலை, 2.39 சதவீதம் குறைந்திருந்தது.இருப்பினும், ஒரு சில முக்கிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. உணவு தானியங்கள் விலை, 4.76 சதவீதம் உயர்ந்திருந்தது. இது தவிர, அரிசி (2.01 சதவீதம்),கோதுமை (0.24 சதவீதம்), வெங்காயம் (16.08 சதவீதம்), பழங்கள் (24.76 சதவீதம்) மற்றும் முட்டை, இறைச்சி, மீன் வகைகள் (10.32 சதவீதம்) ஆகியவற்றின் விலை அதிகரித்து காணப்பட்டது.எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான செலவினம், 12.98 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தில், 12.84 சதவீதமாக இருந்தது.உணவு சாராத பொருட்களின் கீழ், நூலிழை விலை, 39.59 சதவீதம் என்ற அளவிலும், தாதுப் பொருட்கள் விலை, 28.51 சதவீதமும் உயர்ந்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)