பதிவு செய்த நாள்
07 ஜூலை2011
12:28
சென்னை:ஐபால் மீடியா நிறுவனத்தின் சார்பில், சென்னையில் 'லக்சுரி ஹோம்ஸ் 2011' என்ற பெயரில், சொகுசு வகை குடியிருப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.சக்தி கூறியதாவது: மார்க் பிராப்பர்ட்டீஸ், ஹிர்கோ, லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இந்நிறுவனங்களின், 75 லட்சம் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான வில்லா வகை குடியிருப்புகள், விடுமுறை இல்லங்கள், பென்ட் ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு சொகுசு குடியிருப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை கண்காட்சியில் பெறலாம்.சென்னை வர்த்தக மையத்தில், ஜூலை 9, 10 தேதிகளில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியை காணவும், குடியிருப்புகளை பதிவு செய்யவும் 3,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சக்தி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|