பதிவு செய்த நாள்
14 ஜூலை2011
16:47
புதுடில்லி : பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் காலாண்டு நிகரலாபம் 20.48 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ரூ.711.06 கோடியை வருமானமாக ஈட்டி உள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.590.15 கோடிகளை மட்டுமே வருமானமாக பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை விகிதம் 22.73 சதவீதம் அதிகரித்து ரூ.4,586.91 கோடி லாபம் பெறப்பட்டுள்ளது. மோட்டர் சைக்கிள் விற்பனையும் 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் 9,63,051 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. முதல் காலாண்டின் முடிவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மொத்த விற்பனை 18 சதவீதம் அதிகரித்து, இந்த கால அளவில் 10,92,815 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|