கோவையில் ஹோம் பேஷன் எக்ஸ்போகோவையில் ஹோம் பேஷன் எக்ஸ்போ ... தமிழக அரசின் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை  உயர்வு தமிழக அரசின் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை உயர்வு ...
தரை விரிப்புகள் ஏற்றுமதி181 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2011
03:58

புதுடில்லி:நாட்டின், தரை விரிப்புகள் ஏற்றுமதி, செமன்ற ஜூன் மாதத்தில், 181 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.01 கோடி டாலராக (46 கோடியே 46 லட்சம் ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே மாதத்தில், 36 லட்சம் டாலராக (16.56 கோடி ரூபாய்) இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. லத்தீன் அமெரிக்கா,சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இந்திய தரை விரிப்புகளுக்கு, வரவேற்பு அதிகரித்ததையடுத்து ஏற்றுமதி வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் தரைவிரிப்புகளுக்கான தேவை அதிகரிக்கும் என, தரை விரிப்பு ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.நாட்டின் தரை விரிப்புகள் ஏற்றுமதியில், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 55 சதவீதமாக உள்ளது. இதை தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் 20 சதவீதமும், லத்தீன் அமெரிக்கா 10 ய்தவீத பங்களிப்பையும் கொண்டு விளங்குகின்றன.இருப்பினும், öய்ன்ற மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூன் தரை விரிப்பு ஏற்றுமதி, 7.30 கோடி டாலரிலிருந்து (336 கோடி ரூபாய்), 1 கோடி டாலராக (46 கோடி ரூபாய்) மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாத காலத்தில், தரைவிரிப்புகள் ஏற்றுமதி 14 கோடி டாலராக (644 கோடி ரூபாய்) உயர்வடைந்துள்ளது. இது, கடந்த நிதி ஆண்டின் இதே மூன்று மாத காலத்தை விட, 17 ய்தவீதம் அதிகமாகும்.சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் தரை விரிப்புகள் ஏற்றுமதி, இதற்கு முந்தைய நிதியாண்டை விட 24 ய்தவீதம் அதிகரித்து, 65.3 கோடி டாலராக(3,004 கோடி ரூபாய்) இருந்தது. இது, நடப்பு 2011-12ம் நிதியாண்டில், 80 கோடி டாலராக (3,680 கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)