பதிவு செய்த நாள்
17 ஜூலை2011
16:02

புதுடில்லி : வெங்காய ஏற்றுமதிக்கு நீண்ட காலமாக விதிக்கப்பட்டிருந்த தடை, ஏற்றுமதியாளர்கள் நிர்ணயித்துள்ள மிக குறைந்தபட்ச ஏற்றுமதித் தொகை ஆகிய காரணங்களால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவில் இந்தியாவில் வெங்காய ஏற்றுமதி 28 சதவீதம் குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் 3.95 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 5.08 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2010-11ம் நிதியாண்டில் நாட்டின் மொத்த வெங்காய ஏற்றுமதி 31 சதவீதம் குறைந்து 12.89 மில்லியன் டன்னாக இருந்துள்ளது. ஆனால் 2009-2010 ம் நிதியாண்டில் இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி 18.73 மில்லியன் டன்னாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|