ஜி.எஸ்.டி. குழு தலைவராக சுசில்குமார் மோடி தேர்வு:பொருள் மற்றும் சேவை வரி திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கைஜி.எஸ்.டி. குழு தலைவராக சுசில்குமார் மோடி தேர்வு:பொருள் மற்றும் சேவை வரி ... ... இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
பணியாளர்களின் ஊதிய உயர்வால் பொதுத்துறை நிறுவனங்களின் லாப வளர்ச்சி சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2011
02:38

மும்பை:பணியாளர்களின் ஊதிய உயர்வால், பொதுத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு மிகவும் சரிவடைந்துள்ளது. அதாவது, 2007-08ம் நிதியாண்டிலிருந்து, 2010-11ம் நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாட்டு லாப வளர்ச்சியை விட, ஊதியச் செலவினம் பல மடங்கு அதிகரித்துள்ளது.பொதுத் துறையை சேர்ந்த, 41 நிறுவனங்களின் மொத்த வருவாய், செயல்பாட்டு லாபம், ஊழியர்களுக்கான செலவினம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், நிறுவனங்களின் மொத்த வருவாய், 3.01சதவீதத்தில் இருந்து, 3.55சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. அதேசமயம், ஊழியர்களுக்கான செலவு, 18.62சதவீதத்தில் இருந்து 25.28சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஊதிய உயர்வு காரணமாக, பொதுத்துறை நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களுக்கு செலவிடும் தொகை அதிகரித்துள்ளது.2009-10ம் நிதியாண்டில் மட்டும், பணவீக்க உயர்வு, பொருளாதார மந்தநிலை, இதர நாட்டு செலாவணிகளுக்கு எதிரான ரூபாய் மதிப்பு உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பொதுத்துறை நிறுவனங்களின் வருவாய், 5.7சதவீதம் எதிர்மறை வளர்ச்சியை கண்டுள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பொதுத்துறை நிறுவனங்களின், நான்கு ஆண்டுகால ஊதியச் செலவு, 85.4சதவீதம் என்றளவில் ( ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி 16.7சதவீதம்) உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகித அடிப்படையிலான, ஊதியச் செலவு உயர்வில், இந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் ஊதியச் செலவு, 72.17சதவீதம் அதிகரித்துள்ளது.இரண்டாவது இடத்தில் குஜராத் ஸ்டேட் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தின் ஊதியச் செலவினம், 40.09சதவீதம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, என்.எச்.பி.சி நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின், ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி விகித அடிப்படையிலான மொத்த வருவாய், 22.54சதவீதம் என்ற அளவிலும், செயல்பாட்டு லாபம், 27.15சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கான செலவினம், 31.22சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்துள்ளது. பீ.பி.சி.எல் நிறுவனத்தின், ஒட்டு மொத்த ஆண்டு வளர்ச்சி விகித அடிப்படையில், ஊழியர்களுக்கான செலவினம், 29.27சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. ஆனால், இதன் மொத்த வருவாய், 11.75சதவீதம் என்ற அளவிலும், செயல்பாட்டு லாபம், 5.3சதவீதம் என்ற அளவிலும் உள்ளது. எச்.பி.சி.எல் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான செலவினம், 28.96சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 10.72சதவீதம் என்ற அளவிலும்,செயல்பாட்டு லாபம், 10.64சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.என்.எல்.சி., என்று ”ருக்கமாக அழைக்கப்படும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பணியாளர்களுக்கான செலவினம், 25.9சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஆனால், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 16.07 சதவீதம் மற்றும் செயல்பாட்டு லாபம், 13.38 சதவீதம் என்ற அளவில் உள்ளது.காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (கெயில்) நிறுவனத்தின் பணியாளர் செலவினம், 25.6சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. அதே சமயம், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 18.73 சதவீதம் என்ற அளவிலும், செயல்பாட்டு லாபம், 13.95 சதவீதம் என்ற அளவில்தான் உயர்ந்துள்ளது. ஐ.ஓ.சி., நிறுவனத்தின் ஊழியர்களுக்கான செலவினம், 25.18சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ள நிலையில், இதன் மொத்த வருவாய்,10.73 சதவீதம் என்ற அளவிலும்,செயல்பாட்டு லாபம், 2.85 சதவீதம் என்ற அளவில் உள்ளது.என்.டி.பி.சி நிறுவனத்தின் பணியாளர்களுக்கான செலவினம், 24.44சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், இதன் மொத்த வருவாய், 13.76 சதவீதம், மற்றும் செயல்பாட்டு லாபம், 6.76 என்ற அளவில்தான் உயர்ந்துள்ளது.பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான செலவினம், 21.89சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. ஆனால், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 24.42 சதவீதம் என்ற அளவிலும், செயல்பாட்டு லாபம், 24.08 சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் பணியாளர்கள் செலவினம், 21.8சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 22.01சதவீதம் மற்றும் செயல்பாட்டு லாபம், 22.46சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது.பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஊழியர்களுக்காக செலவிட்ட தொகை, 18.99சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.41சதவீதமாகவும், செயல்பாட்டு லாபம், 3.06சதவீதம் என்ற அளவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)