பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
09:14
லண்டன்:இந்தாண்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தினை வெனிசுலா பெற்றிருப்பதாக, கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் என்ற ஓபெக் அமைப்பு தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஓபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில், வெனிசுலா, எமிரேட்ஸ், சவூதி அரேபியா, ஈரான், ஈராக், அல்ஜீரியா, கத்தார்,நைஜீரியா, குவைத், லிபியா, இந்தோனேஷியா என மொத்தம் 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கி்ன்றன. இந்நிலையில் ஓபெக் அமைப்பின் வருடாந்திர ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் 2002-2011-ம் ஆண்டிற்கு எண்ணெய் உற்பத்தி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில் லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா இந்தாண்டு நாள் ஒன்றுக்கு 296.05 பில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 211.02 பில்லியன் பேரல்கள் தான் உற்பத்தி செய்தது. இது 12.01 சதவீதம் ஆகும். ஈரான், ஈராக் ஆகிய நாடுகள் பின்தங்கியுள்ளன. இது குறித்து ஓபெக் அமைப்பின் , பெட்ரோலிய பொருட்கள் குறித்த புலனாய்வு கொள்கை, நிபுணர் பேஃரன்பிரைஸ் , கூறுகையில், போட்டியை சமாளிக்க ஓபெக் அமைப்பை தரம் உயர்த்துவது அவசியமாகிறது. எனினும் தொடர்ச்சியாக சவூதி அரேபியா (நாள் ஒன்றுக்கு 264.05 பில்லியன் பேரல்கள்) தான் அதிகளவு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. அதே போன்று ஈரான், ஈராக் போன்ற நாடுகள் இந்தாண்டு உற்பத்தியில் 24 சதவீதம் குறைந்துள்ளது. கடைசி இடத்தில் அல்ஜீரியா உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|