பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
13:42

மும்பை : கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு முதன் முறையாக கோடை காலத்தில் பீர் விற்பனை சரிவடைந்துள்ளது. பொருளாதார தட்டுப்பாடு மட்டுமின்றி மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் குடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதும், தொடர்ச்சியான விலை உயர்வும் பீர் விற்பனை சரிவடைந்ததற்கான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தின் முதல் காலாண்டில் 71 மில்லியன் பீர் கேஸ்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டை விட 5 சதவீதம் குறைவாகும். மகாராஷ்டிராவில் 10 சதவீதமும், தமிழகத்தில் 13 சதவீதமும் பீர் விற்பனை சரிவடைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதத்தில் 4 முதல் 5 சதவீதம் வரை பீர் விற்பனை சரிந்துள்ளது. இது மூன்றில் ஒரு பங்கு விற்பனை மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|