பதிவு செய்த நாள்
20 ஜூலை2011
14:03

நியூயார்க் : நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு முடிவில் ஐபோன் மற்றும் ஐபேட் விற்பனையின் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் நிகரலாபம் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் இந்நிறுவனம் பெற்ற லாபம் 7.31 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இதற்கு முந்தைய ஆண்டில் ஐபோன் விற்பனை மூலம் இந்நிறுவனம் பெற்ற லாபம் 3.25 பில்லியன் டலார்கள் மட்டுமே. ஜூன் 25ம் தேதியுடன் முடிவடைந்த 3வது காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் பெற்ற மொத்த வருமானம் 28.57 பில்லியன் டாலர்களாகும். இது முந்தைய ஆண்டை விட 82 சதவீதம் அதிகமாகும். இந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் 20.34 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்துள்ளது. இது 142 சதவீதம் வளர்ச்சியாகும். இதே போன்று 9.25 மில்லியன் ஐபேட்கள் விற்பனை செய்துள்ளது.
மேலும் பொது செய்திகள்




|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|