பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
00:15

புதுடில்லி: நாட்டின் பணவீக்கம், ஜூலை 9ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 7.58 சதவீதமாக குறைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 8.31 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. ஆக, உணவுப் பொருள் பணவீக்கம், 0.73 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.கணக்கீடு செய்வதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வாரத்தில், பருப்பு வகைகள் விலை மிகவும் குறைந்துள்ளது. அதேசமயம், எரிபொருட்கள் மற்றும் மின்சாரச் செலவினம் அதிகரித்ததையடுத்து, இதற்கான குறியீட்டு எண் ஆண்டுக்கணக்கில், 11.89 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. ஆண்டுக்கணக்கில், பருப்பு வகைகள் விலை, 7.67 சதவீதம் குறைந்திருந்தது. இருப்பினும், இதர உணவுப் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது.கணக்கீட்டு வாரத்தில், வெங்காயத்தின் விலை, சென்ற ஆண்டின் இதே வாரத்தை விட, 19.68 சதவீதம் என்ற அளவிலும், பழங்கள் விலை, 15.84 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்திருந்தது. மேலும், பால் விலை 10.76 சதவீதமும், முட்டை, இறைச்சி, மீன்கள் விலை 8 சதவீதமும் உயர்ந்திருந்தது.இவை தவிர, உணவு தானியங்கள் மற்றும் காய்கறிகள் விலை முறையே, 4.77 சதவீதம் மற்றும் 4.31 சதவீதம் அதிகரித்திருந்தது.முக்கிய உணவுப் பொருட்களின் விலை, 11.13 சதவீதம் என்ற அளவில், சற்று குறைந்து காணப்பட்டது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 11.58 சதவீதம் என்ற அளவில் இருந்தது. மொத்த விலை குறியீட்டு எண் கணக்கீட்டில், முக்கிய பொருட்களின் பங்களிப்பு 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.உணவு சாராத பொருட்கள் விலை, ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 15.50 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 15.20 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|