பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
00:17

கொச்சி: நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில் நாட்டின் கறுப்பு வகை மிளகு ஏற்றுமதி 6 சதவீதம் வளர்ச்சி கண்டு 4,460 டன்னாக அதிகரித்துள்ளது. இது, 2010-11ம் நிதியாண்டின், இதே காலாண்டில், 4,200 டன்னாக இருந்தது.உள்நாட்டில் மிளகிற்கான @தவையும், அதன் விலையும் அதிக ஏற்ற, இறக்கமின்றி உள்ளது.இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளில், மிளகிற்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனால், சர்வதேச அளவில், மிளகு உற்பத்தியில் முன்னணி நாடுகளின் மிளகு ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.உலகளவில் மிளகு உற்பத்தியில், முன்னணியில் உள்ள வியட்நாம் நாடு, நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், 35 ஆயிரம் டன் மிளகை ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு 2011ம் ஆண்டின், ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்நாட்டின் மிளகு ஏற்றுமதி (கறுப்பு மற்றும் வெள்ளை மிளகு) ஏற்றுமதி 68 ஆயிரம் டன்னாக இருந்தது.மேற்கத்திய நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளில் மிளகிற்கான தேவை அதிகரித்துள்ளது. வியட்நாம் நாட்டின் மிளகு, சர்வதேச சந்தையில், ஒரு டன் 5,500 டாலர் என்ற அளவில் உள்ளது. கடந்த ஒரு சில மாதங்களாக, பிரேசில் நாடு மிளகு விற்பனையில் ஈடுபடாமல் இருந்தது. தற்போது, அறுவடை முடிந்து, Œந்தைக்கு வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாடு மீண்டும் மிளகு ஏற்றுமதி மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|