பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
00:20

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம்,@நற்று மேலும் சுணக்கம் கண்டது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம், இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது. ஒரு சில முன்னணி நிறுவனங்களின், காலாண்டு செயல்பாடு நன்கு இல்லாததாலும், ரிசர்வ் வங்கி, வரும் செவ்வாய்கிழமையன்று (26ம் தேதி) வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தக்கூடும் என்ற ஐயப்பாட்டாலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது. @நற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட 11 துறைகளின் குறியீட்டு எண் சரிவடைந்திருந்தது. இருப்பினும், தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனப் பங்குகளுக்கு தேவைப்பாடு காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 66.19 புள்ளிகள் குறைந்து, 18,436.19 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,566.99 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,415.36 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 21 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 25.45 புள்ளிகள் சரிந்து, 5,541.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 5,578.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,532.70 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|