பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
13:01

புதுடில்லி : ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான டோஷிபா, இந்தியாவிலேயே தனது பொருட்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைப்பதுடன் தனது சர்வதேச வர்த்தக போட்டியை, புதிய தயாரிப்புக்களைக் கொண்டு பலப்படுத்தவும் தீர்மானித்துள்ளது. நுகர்பொருட்களான டிவி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவைகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளதாக டோஷிபா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் டிவி தயாரிப்பு துவங்கப்படும் எனவும், இந்திய சந்தைகளில் காலூண்டுவதே தங்களின் லட்சியம் எனவும் டோஷிபா நிறுவன டிஜிட்டல் தயாரிப்பு மற்றும் சேவை பிரிவு துணை தலைவர் மசாயுகி இடோ தெரிவித்துள்ளார். தற்போது டோஷிபா நிறுவனம் தனது அனைத்து தயாரிப்புக்களையும் இந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இருந்தே ஏற்றுமதி செய்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|