மைசூர் ஸ்டேட் வங்கி நிகரலாபம் சரிவுமைசூர் ஸ்டேட் வங்கி நிகரலாபம் சரிவு ... கோல்கேட் பாமோலிவ் நிகர லாபம் சரிவு கோல்கேட் பாமோலிவ் நிகர லாபம் சரிவு ...
மாருதி கார் விற்பனை பொறுப்பாளர்கள் தேர்வு முகாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2011
14:42

திருநெல்வேலி: சென்னையில் வாகன நிறுவனத்தில் பணியாற்ற நெல்லை பல்கலையில் நேரடித்தேர்வு நடத்தப்படுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையம் சார்பில் கேரள மாநிலம் கொச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாப்புலர் வெகிகிள்ஸ் மற்றும் சர்வீஸ் என்ற நிறுவனத்திற்காக வேலைவாய்ப்பு முகாம் வரும் 25ம் தேதி திங்கள் கிழமை நடத்தப்படுகிறது. மேற்கண்ட நிறுவனம் 7 ஷோரூம் மற்றும் 27 பணிமனைகளை கேரளா மற்றும் சென்னையில் கொண்டுள்ளது. அந்நிறுவனத்தில் விற்பனை நிர்வாகி பதவிக்கு தகுதிவாய்ந்த இளைஞர்களை தேர்வு செய்யவுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னையில் உள்ள மாருதி கார் விற்பனைக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தற்போது 100 விற்பனை நிர்வாகிகள் வரை நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு 3 மாதங்களுக்கு மாதம் ரூபாய் 8000 மற்றும் ஊக்க தொகை சம்பளமாக வழங்கப்படும். 3 மாதங்களுக்கு பிறகு அவர்களது செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாதம் ரூபாய் 10000- மற்றும் ஊக்க தொகை வழங்கப்படும். சென்னையில் தங்கும் இடம் கம்பெனி செலவிலேயே ஏற்பாடு செய்து தரப்படும். முன் அனுபவம் உள்ள மற்றும் அனுபவம் இல்லாத பட்டதாரி ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விருப்பமுடையோர் வரும் 25ம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.தங்கள் சுயதகவல் பதிவேடு, 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் அவர்களது புகைப்படஅடையாள அட்டையைக் கொண்டு வரவேண்டும் என பல்கலை இளைஞர் நலத்துறை இயக்குநர் ரோசரிமேரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)