பதிவு செய்த நாள்
24 ஜூலை2011
16:51

புதுடில்லி : இந்திய தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்களின் மொத்த வருமானம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது. 2010-11ம் நிதியாண்டில் தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்களின் மொத்த வருமானம் ரூ.2,83,207 கோடியாகும். கடந்த ஆண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வருமானம் ரூ.2,64,669 கோடியாகும். இந்திய தொலைத் தொடர்புத்துறை தொடர்பான பிற சேவைகளின் வருமானமும்14.9 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரூ.166,168 கோடி வருமானம் பெறப்பட்டுள்ளது. இத்தகவலை வாய்ஸ் அன் டேட்டா நிறுவன தலைமை எடிட்டர் இப்ராஹிம் அகமது தெரிவித்துள்ளார். இருப்பினும் தொலைத்தொடர்பு சாதன பிரிவு வருமானம் 2.52 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் வருமானம் ரூ.1,20,069 கோடியிலிருந்து ரூ.1,17,039 கோடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|