அமெரிக்க கடன் பிரச்னைக்கு தீர்வு 'சென்செக்ஸ்' 117 புள்ளிகள் உயர்வுஅமெரிக்க கடன் பிரச்னைக்கு தீர்வு 'சென்செக்ஸ்' 117 புள்ளிகள் உயர்வு ... நடப்பு 2011 - 12 ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2சதவீதமாக இருக்கும் நடப்பு 2011 - 12 ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.2சதவீதமாக இருக்கும் ...
நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 46 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
02:38

புதுடில்லி:நடப்பு 2011ம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 46.45 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,921 கோடி டாலராக (1 லட்சத்து 31 ஆயிரத்து 445 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டு ஜூன் மாதத்தில், 1,994 கோடி டாலராக (89 ஆயிரத்து 730 கோடி ரூபாய்) இருந்தது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம், மிகவும் சுணக்கமாக உள்ள நிலையிலும், நாட்டின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகம், திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.நடப்பு 2011-12ம் நிதியாண்டின், முதல் காலாண்டிலும் ஏற்றுமதி, 45.7 சதவீதம் அதிகரித்து, 7,900 கோடி டாலராக (3 லட்சத்து 55 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. குறிப்பாக, பெட்ரோலிய பொருட்கள், ஆயத்த ஆடைகள், பொறியியல் மற்றும் மருந்து போன்றவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாகவே, நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, இந்தளவு உயர்ந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலர் ராகுல் குல்லார் தெரிவித்தார்.கடந்த 2010-11ம் நிதியாண்டில், 24 ஆயிரத்து 600 கோடி டாலர் (11 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிற்கு மேற்கொள்ளப்பட்ட நாட்டின் மொத்த ஏற்றுமதியில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 35 சதவீத அளவிற்கு இருந்தது.நாட்டின் இறக்குமதியும், சென்ற ஜூன் மாதத்தில், 42.46 சதவீதம் அதிகரித்து, 3,680 கோடி டாலராக (1 லட்சத்து 65 ஆயிரத்து 600 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரித்துள்ளதை அடுத்து, ஜூன் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை, 760 கோடி டாலராக (34 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) இருந்தது.ஏப்ரல் - ஜூன் மாதங்களில், நாட்டின் இறக்குமதி, 36.2 சதவீதம் அதிகரித்து, 11 ஆயிரத்து 60 கோடி டாலராக (4 லட்சத்து 97 ஆயிரத்து 700 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இக்காலாண்டில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 3,160 கோடி டாலராக (1 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) இருந்தது. மொத்த இறக்குமதியில், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, 3,050 கோடி டாலராக (1லட்சத்து 37 ஆயிரத்து 250 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது.எண்ணெய் மற்றும் எண்ணெய் சாராத இதர பொருட்கள் இறக்குமதி, சென்ற ஜூன் மாதத்தில் முறையே, 30 சதவீதம் மற்றும் 47.8 சதவீதம் உயர்ந்து, 1,018 கோடி டாலராகவும் (45 ஆயிரத்து 810 கோடி ரூபாய்), 2,660 கோடி டாலராகவும் (1 லட்சத்து 19ஆயிரத்து 700 கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, 18.1 சதவீதம் அதிகரித்து, 3,052 கோடி டாலராக (1 லட்சத்து 37 ஆயிரத்து 340 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 2,584 கோடி டாலராக (1 லட்சத்து 16 ஆயிரத்து 280 கோடி ரூபாய்) இருந்தது.இதே காலாண்டுகளில், எண்ணெய் சாராத இதர பொருட்கள் இறக்குமதி, 44.68 சதவீதம் உயர்ந்து, 5,535 கோடி டாலரிலிருந்து (2 லட்சத்து 49 ஆயிரத்து 75 கோடி ரூபாய்), 8,000 கோடி டாலராக (3 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்திருந்தது என, ராகுல் குல்லார் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)