சரிவில் தொடங்கியது வர்த்தகம்சரிவில் தொடங்கியது வர்த்தகம் ... காபி ஏற்றுமதி 38 சதவீதம் அதிகரிப்பு காபி ஏற்றுமதி 38 சதவீதம் அதிகரிப்பு ...
சென்னையில் ரூ.100 கோடியில் சித்த மருந்து ஆய்வகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஆக
2011
10:13

சென்னை: சென்னை, தாம்பரத்தில் 100 கோடி ரூபாயில் சித்த மருந்து ஆய்வகம் அமைக்க, இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய அமைப்பு, 'ஆயுஷ்' முடிவு செய்துள்ளது. பன்னிரண்டாவது திட்டத்தில் இதற்கு நிதி ஒதுக்க, திட்டக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில், இந்த மருந்து ஆய்வகம் அமைக்கப்படும். இந்த ஆய்வகத்தில் மேற் கொள்ளப்படும் புதிய ஆராய்ச்சிகள் மூலம், சித்த மருந்துகளை உலக தரத்துக்கு மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும், சித்த மருந்துகளின் மகிமைகளை சர்வதேச மருந்து சந்தைக்கு கொண்டு செல்ல, இந்த மருந்து ஆய்வகம் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது. புதிய மருந்துகளால் உள்ளூர் மக்களுக்கும் பயன் கிடைக்கும் என, சித்த மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது குறித்து, மத்திய திட்டக்குழு (ஆயுஷ்) செயற்குழு உறுப்பினர் டாக்டர் சிவராமன் கூறியதாவது: ஆயுர்வேதம், சித்தம், யுனானி, யோகா போன்ற இந்திய மருத்துவ முறைகளை மேம்படுத்த, அதிக முக்கியத்துவம் அளிப்பது என, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை விட, 10 மடங்கு கூடுதல் நிதி ஒதுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12வது திட்டத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய்,'ஆயுஷ்' மேம்பாட்டுக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. தேசிய சுகாதார திட்டங்கள், இப்போது, 'அலோபதி' மருத்துவத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இனி, இத்திட்டங்களில் ஆயுர்வேத, சித்த மருத்துவத்தையும் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, காசநோய் தடுப்பு, ரத்த சோகை ஒழிப்பு போன்ற திட்டங்களில், இனி சித்த, ஆயுர்வேத மருந்துகளையும் வழங்க, கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ரத்தசோகைக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை கொடுப்பதைப் போன்று, இரும்புச்சத்தை பெருக்கும் மூலிகைகள், பழத்திலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகளைக் கொடுக்க யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்று, தொற்றுநோய்களுக்கு, தடுப்பூசிகளோடு, உடலில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சித்த, ஆயுர்வேத மருந்துகளை அளிக்கவும் ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகத்தைப் போன்று, அகில இந்திய ஆயுர்வேத மருத்துவ விஞ்ஞான கழகம் அமைக்கும் திட்டம் நடப்பு திட்ட காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இந்த திட்ட காலத்தில் முடுக்கி விடப்படும். மேலும் யுனானி, யோகா, சித்த மருத்துவத்துக்கும், அகில இந்திய அளவில் பெரிய மருத்துவமனைகளை, 12வது திட்ட காலத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'மருத்துவ பன்முகத்தன்மை' கோட்பாட்டின்படி, எம்.பி.பி.எஸ்., பாடத் திட்டத்தில் ஆயுர்வேத, சித்த மருத்துவ பாடங்களை சேர்க்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த மருத்துவ கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில், அலோபதி மற்றும் இந்திய மருத்துவ முறையை ஒருங்கிணைக்கும் வகையில், சிகிச்சை முறைகள், மருந்துகளை பரிமாறிக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவத்துக்கு தனியாக மத்திய கவுன்சில் அமைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது, சித்த மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில், 200 கோடி ரூபாய்க்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு டாக்டர் சிவராமன் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)