சென்னை விமான நிலையம் பயணிகள் போக்குவரத்து 14 சதவீதம் வளர்ச்சிசென்னை விமான நிலையம் பயணிகள் போக்குவரத்து 14 சதவீதம் வளர்ச்சி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு ...
அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்த அச்சப்பாட்டால் பீ.எஸ்.இ. 'சென்செக்ஸ்' 387 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஆக
2011
00:19

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையன்று, வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி கண்டது. குறிப்பாக, வர்த்தகத்தினிடையே, மும்பை பங்குச் சந்தையின் 'சென்செக்ஸ்' குறியீட்டு எண், கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைவாக, அதாவது,17,000 புள்ளிகளுக்கும் கீழேசென்று, 16,990 புள்ளிகள் வரை சரிவடைந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் 'நிப்டி'யும் கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு, 5,116 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. அமெரிக்காவின் பொருளாதாரம் மீண்டும் சரிவு நிலைக்கு சென்று விடும் என்ற ஐயப்பாட்டால், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று வீழ்ச்சி கண்டது. குறிப்பாக, அமெரிக்காவின் 'டோவ் ஜோன்ஸ்' குறியீட்டு எண், கடந்த இரண்டரை ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 513 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டு, 11,383 புள்ளிகளில் நிலைப்பெற்றது.அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் 9.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. தொழில் துறை உற்பத்தியிலும் கடுமையான சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு,சென்ற ஜூன் மாதத்தில், அமெரிக்கர்கள் செலவிடும் தொகை குறைந்து போனது. மேலும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையால், அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில், ஐரோப்பாவில் கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, ஆகிய நாடுகள் அதிக கடன்சுமையால், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளிடம் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இதுவும், ஒட்டு மொத்த அளவில், பங்கு வர்த்தகத்தில் பின்னடைவை ஏற்படுத்தியது.கடந்த 2008ம் ஆண்டு, அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடியால், அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதன் தாக்கம், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.பின்பு, அமெரிக்க பொருளாதாரம், இயல்பு நிலைக்கு திரும்பியது என்றாலும், அந்நாட்டில் 400க்கும் மேற்பட்ட வங்கிகள் திவாலாகின. அமெரிக்கவைச் சார்ந்திருந்த, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளின் பொருளாதாரமும் சரிவைச் சந்தித்தன. அமெரிக்காவிற்கு, அதிகளவில் ஏற்றுமதி மேற்கொண்ட நாடுகளின் வளர்ச்சியிலும் தேக்க நிலை ஏற்பட்டது. இந்தியா தற்சார்புடைய நாடு என்பதால், அப்போது அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சரிவு நிலை, நம் நாட்டிற்கு அதிக பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. என்றாலும், தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த நம் நாட்டு நிறுவனங்களின் செயல்பாடு ஓரளவிற்கு பாதிக்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்க அரசு கடன் உச்சவரம்பு பிரச்னையில் சிக்கியது. அதில் இருந்து சில நாட்களுக்கு முன்பு மீண்ட போதிலும், இது தற்காலிக தீர்வு தான் என்றும், அமெரிக்கா மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என்று தகவல் வெளியானதால் சர்வதேச பங்குச் சந்தைகள், சரிவை சந்தித்தன.வெள்ளிக்கிழமையன்று, ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட இதர ஆசிய பங்குச் சந்தைகளில், பங்கு வர்த்தகம் மிகவும் மோசமானது.பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்து போனது. இதை தடுக்கும் விதத்தில், மத்திய அரசும், முனைப்பு காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் செயலர் ஆர். கோபாலன், 'நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான காரணிகள் வலுவாகவே உள்ளன. எனவே, நாம் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. வெளிநாடுகளில், ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால்தான் பங்கு வர்த்தகத்தில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. வரும், திங்கள் அல்லது செவ்வாய்கிழமையன்று பங்கு வர்த்தகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும். இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாக கருதுகின்றனர். எனவே, மீண்டும் சந்தை எழுச்சி காணும்' என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பு வெளியானதையடுத்து, நாட்டின் பங்கு வர்த்தகம் ஓரளவிற்கு முன்னேறியது. வெள்ளியன்று இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவு நிலையால், மூன்றரை மணி நேரத்தில் பங்குச் சந்தைகளில் பட்டியலிப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் விலை, ஒட்டு மொத்த அளவில், 2.50 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி கண்டது. அதாவது, நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், பங்குகளை விற்பனை செய்திருக்கும் நிலையில், அவர்களுக்கு இந்த அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருக்கும்.பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு நிலையால், ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் மற்றும் வட்டி செலவின அதிகரிப்பால், பாதிக்கப்படும் நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் குறைந்து போனது. மேலும், இந்திய பங்குச் சந்தைகளில், முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா ஸ்டீல், இன்போசிஸ் போன்றவற்றின் பங்குகளின் விலையும் மிகவும் சரிவடைந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 387.31 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 17,305.87 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 17,358.18 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,990.91 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி, ஹிண்டால்கோ மற்றும் சிப்லா ஆகிய மூன்று நிறுவனங்களை தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்திருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' வர்த்தகம் முடியும் போது, 120.55 புள்ளிகள் குறைந்து, 5,211.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,229.65 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,116.45 புள்ளிகள் வரையிலும் சென்றது.கடைசி செய்தி: சென்ற ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் 1.17 லட்சம் பேர் புதிதாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அமெரிக்க அர” அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு (அந்நாட்டில் பகல்) அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவு தடுத்து நிறுத்தப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)