எஸ்கார்ட்ஸ் நிகரலாபம் 71 % சரிவுஎஸ்கார்ட்ஸ் நிகரலாபம் 71 % சரிவு ... ஜெனரல் மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனை 33 சதவீதம் உயர்வு ஜெனரல் மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனை 33 சதவீதம் உயர்வு ...
நிறுவனச் செய்திகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
00:01

எஸ்கார்ட்ஸ் நிறுவனம்நிகர விற்பனை ரூ.806 @காடி டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், எஸ்கார்ட்ஸ் நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 13.20 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 71.16 சதவீதம் (45.83 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 9.58 சதவீதம் சரிவடைந்து, 806.21 கோடியிலிருந்து, 728.96 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் நிதி ஆண்டு அக்டோபர்-செப்டம்பர் வரை கணக்கிடப்படுகிறது. * * * சுந்தரம் பாஸனர்ஸ்நிகர லாபம் 55 சதவீதம் உயர்வு டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் பாஸனர்ஸ் நிறுவனம், வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 34.93 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 55 சதவீதம் (22.55 கோடி ரூபாய்) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இதன் விற்பனை மற்றும் இதர வருவாய் 29 சதவீதம் உயர்ந்து, 406.04 கோடியிலிருந்து, 522 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. * * * முந்த்ரா போர்ட்மொத்த வருவா# ரூ.530 கோடி அதானி குழுமத்தைச் சேர்ந்த, முந்த்ரா போர்ட் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், 254 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 20 சதவீதம் (211 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இதன் மொத்த வருவாய், 27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 416 கோடியிலிருந்து, 530 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. * * * பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ்நிகர விற்பனை ரூ.1,106 கோடி பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், 42 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 27 சதவீதம் (33 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,106 கோடி ரூபாயாக உள்ளது. இதர வருவாய், 30 சதவீதம் அதிகரித்து, 26 கோடி ரூபாயாக உள்ளது. இதில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான, சொத்து விற்பனையின் வாயிலாக கிடைத்தத் தொகையும் அடங்கும். * * * டயமண்ட் பவர் 30 சதவீத டிவிடெண்ட் டயமண்ட் பவர் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம், ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 29.63 கோடி ரூபாயை நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டை விட, 6சதவீதம் (31.22 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் விற்பனை, 381.61 கோடியிலிருந்து, 369.84 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில், பங்குதாரர்களுக்கு 30 சதவீதம் டிவிடெண்டு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு 3 ரூபாய் டிவிடெண்ட் கிடைக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)