பதிவு செய்த நாள்
08 ஆக2011
00:02

சென்னை: தமிழக அரசின் பட்ஜெட், ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என சென்னை எலக்ட்ரானிக் அண்டு இன்போடெக் டிரேடர்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.இது குறித்து, இச்சங்கத்தின் கவுரவ செயலர் எச்.சந்தாலியா வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் தமிழக அரசு, எலக்ட்ரானிக் பொருள்கள் மற்றும் மொபைல் உதிரி பாகங்களுக்கான மதிப்பு கூட்டு வரியை (வாட்) 4 சதவீதத்தில் இருந்து, 14.5 சதவீதமாக உயர்த்தியது.இந்நிலையில், தமிழக அரசின் பட்ஜெட்டில், வரி குறைப்பு இருக்கும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய மின்னணு சந்தையாக விளங்கும் தமிழகத்தின் கோரிக்கையை, நிதி அமைச்சர் ஏற்காதது, வர்த்தகர்களுக்கு ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.வர்த்தகர்களின் வேதனைக் குரலுக்கு செவி மடுத்து, தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வர்த்தகர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|