தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது சென்னை மின்னணு வர்த்தகர்கள் சங்கம் அறிக்கைதமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது சென்னை மின்னணு வர்த்தகர்கள் சங்கம் ... ... சுகுணா பவுல்ட்ரி பார்ம் புதிய கால்நடை தீவனம், உயிரி உரம் அறிமுகம் சுகுணா பவுல்ட்ரி பார்ம் புதிய கால்நடை தீவனம், உயிரி உரம் அறிமுகம் ...
ஏ.டீ.டி. இந்தியா நிறுவனம் தமிழகத்தில் மின்னணு பாதுகாப்பு வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது : ஏ.கே.விஜய்தேவ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2011
00:03

சென்னை: உலகளவில் தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவற்றின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பிற்கான ஒட்டுமொத்த தீர்வுகளை வழங்குவதில் அமெரிக்காவின் டைகோ இண்டர்நேஷனல் முதலிடத்தில் உள்ளது. இக்குழுமம், ஆண்டுக்கு 1,800 கோடி டாலர் வருவாயுடன்,60க்கும் மேற்பட்ட நாடுகளில் 1.15 லட்சம் பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தை சேர்ந்த, பெங்களூரில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு இயங்கி வரும் ஏ.டீ.டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ரமேஷ் ஜெயராமன் செயல்பட்டு வருகிறார். தஞ்சையை பூர்வீகமாக கொண்ட இவர், பிறந்து வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பை பத்மா சேஷாத்ரியில் முடித்து, டெல்லியில் பொறியியல் படிப்பும், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர். ஏ.டீ.டி குழுமத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து, பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், இந்தியாவில் நிறுவனத்தின் வர்த்தக விவரங்கள் குறித்து 'தினமலர்' இதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி... இந்தியாவில் நிறுவனத்தின் செயல்பாடு பற்றி கூறுங்கள்..... ஏ.டீ.டி இந்தியா குழுமம், டைக்கோ பயர் அண்டு செக்யூரிட்டி இந்தியா என்ற நிறுவனத்தின் கீழ், மோட்டார் வாகனம்,சிமென்ட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கும், வங்கிகள்,மருந்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல் துறை நிறுவனங்களுக்கும், சில்லறை வர்த்தக துறையில் வணிக வளாகங்கள், அங்காடிகள், குடியிருப்புகள் ஆகியவற்றின் பாதுகாப்பிற்கும், கண்காணிப்பிற்கும் மின்னணு தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை வழங்கி வருகிறது. 'டைகோ' பிராண்டின் கீழ் வழங்கப்படும் இச்சேவைகள் மட்டுமின்றி, முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படைக் கட்டமைப்பு துறைகளின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு சார்ந்த உலகத் தரத்திலான சேவையையும் வழங்குகிறது. இந்தியாவில், நிறுவனத்தின் முக்கிய திட்ட அமலாக்கம் குறித்து கூறவும்....? டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூன்றாவது முனையத்தின் பாதுகாப்பு சேவையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டத்தின் கீழ் 3,000 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் தானியங்கி மின்னணு தொழில்நுட்பம் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன. இது போன்ற சேவைகளுக்காக 50க்கும் மேற்பட்ட நாடுகளில் 40க்கும் அதிகமான கண்காணிப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது போல், கர்நாடகாவில் மின் உற்பத்தி திட்டம், ஒடிசா துறைமுகம் ஆகியவற்றிலும் நிறுவனம் பாதுகாப்பு தீர்வுகளை மேற்கொள்ள உள்ளது. தமிழகத்தில் நிறுவனத்தின் வர்த்தகம் எந்த அளவிற்கு உள்ளது? சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் வர்த்தக வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. சென்னை சில்க்ஸ், தனிஷ்க், லைப் ஸ்டைல், பி.வி.ஆர் சினிமாஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப், சோச் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னணு பாதுகாப்பு சேவை வழங்கி வருகிறோம். தானியங்கி மின்னணு பாதுகாப்பு தொழில்நுட்பம் என்றால் என்ன? கடைகளின் நுழைவாயில் மற்றும் ஒவ்வொரு பிரிவிலும் ரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (ஆர்.ஐ.எப்.டி) தொழில்நுட்பத்தில் செயல்படும் கண்காணிப்பு கருவிகள் இருக்கும். இவை, கடை அடைக்கப்பட்ட பிறகு, திருடர்கள் நுழைந்தால், தன்னிச்சையாக கண்காணிப்பு மையத்திற்கு தகவல் செல்லும்.இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய சேவைக்கான கட்டணம் எவ்வளவு? 15ஆயிரத்தில் இருந்து 20 லட்ச ரூபாய் வரை வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப கட்டணம் மாறுபடும். தானியங்கி முறையில் கண்காணிப்பதற்கு மாதம் 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கட்டணம் வ‹லிக்கப்படும்.சரி.. விழாக் காலங்களில் கடைகளில் கூட்டம் அதிகம் இருக்கும் போது திருட்டை கண்டுபிடிப்பது சுலபமில்லையே? அப்படி சொல்ல முடியாது. கடை வாசலில் பொருத்தப்பட்டுள்ள ஈ.ஏ.எஸ் தொழில்நுட்பத்திலான 'சென்சார்மேட்டிக்' சாதனத்தின் பார்வையில் இருந்து எந்த பொருளும் தப்ப முடியாது. இதற்காகவே பிரத்யேக 'டேக்' எனப்படும் பட்டியை நாங்கள் வழங்குகிறோம். இவை அனைத்து ஆடைகள் மற்றும்பொருள்களுடன் இணைந்திருக்கும். விற்பனையாகும் ஆடைகளில் இருந்து இந்த பட்டியை நீக்கும் போது, அது கணினியில் பதிவாகும். அவ்வாறு பதிவாகாத பட்டி கொண்ட ஆடைகளை திருடி சென்றால், வாசலில் எச்சரிக்கை ஒலி எழுப்பி காட்டிக் கொடுத்து விடும்.பலமுறை பயன்படுத்தக் கூடிய இந்த பட்டி, இறக்குமதி செய்யப்பட்டு 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. பாதுகாப்பு சாதனங்களின் வேறு பரிமாணங்கள் என்ன? திருட்டை தவிர்ப்பதுடன், நிறுவனத்தின் செயல் திறனை மேம்படுத்தவும் இந்த சாதனங்கள் உதவுகின்றன. ஒரு கடைக்கு எந்த நேரத்தில் அதிக கூட்டம் வருகிறது என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப ஊழியர்களை கூட்டவும், இல்லையென்றால் குறைத்து மாற்றுப் பணிகளில் ஈடுபடுத்தவும் முடியும். இதனால் நிறுவனத்திற்கு கணிசமான சேமிப்பும், மனித வள ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் வசதியும் கிடைக்கும். நகைக் கடைக்கென்று பிரத்யேக பாதுகாப்பு சாதனம் உள்ளதா? நகைக்கடைகளில் நாள்தோறும் இரவு கடையை மூடும் போது, அனைத்து நகைகளையும் எடுத்துச் சென்று பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பார்கள். பின்னர் காலையில் மீண்டும் அவற்றை கண்ணாடி அறைகளில் பார்வைக்கு வைப்பார்கள். இதற்கு எளிய தீர்வு ஒன்றை கண்டுபிடித்துள்ளோம்.பிரத்யேக மின்னணு சாதனம் ஒன்றை, ஒரு முறை கண்ணாடி அறைகக்கருகே காண்பித்தால், அதனுள் இருக்கும் நகைகளின் முழு விபரமும் கணினியில் தெரிந்து விடும். இதனால், நேரமும், உழைப்பும் மிச்சமாகும்.நகைகளின் எண்ணிக்கையையும் சுலபமாக கணக்கிடலாம்.எதிர்கால திட்டம் என்ன?நிறுவனம், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மேலும் பல அலுவலகங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை 1,100 ஆக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். விரிவாக்க திட்டத்தின் மூலம் வரும் ஆண்டில் நிறுவனத்தின் வர்த்தகம் 60 -70 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கிறோம். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் குடியிருப்புகளுக்கான பாதுகாப்பு தீர்வுகளிலும் முழு வீச்சில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 08,2011
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)