பங்குச்ச ந்தையின் தொடர் வீழ்ச்சியால் பரஸ்பர நிதித் திட்டங்களில் இருந்து 3.33 லட்சம்பேர் விலகல்பங்குச்ச ந்தையின் தொடர் வீழ்ச்சியால் பரஸ்பர நிதித் திட்டங்களில் இருந்து ... ... தென்னை நார் கழிவுகளுக்கு கிராக்கி தென்னை நார் கழிவுகளுக்கு கிராக்கி ...
தேயிலை ஏல மைய விற்பனையில் தொடரும் விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2011
09:37

குன்னூர் : குன்னூரில் உள்ள தமிழக அரசின் 'டீ சர்வ்' ஏல மையத்தில் விற்கப்படும் தேயிலை தூளின் விலை, இந்தியாவில் உள்ள பிற ஏல மையங்களை ஒப்பிடுகையில் கடைசி நிலையில் உள்ளதால், அரசின், 'ஊட்டி டீ' விற்பனையை அதிகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி சிறு தேயிலை விவசாயிகளின் நலன் காக்கவும், அவர்கள் சாகுபடி செய்து, தொழிற்சாலைகளுக்கு வழங்கும் பசுந்தேயிலைக்கு நல்ல விலை கிடைக்கவும், கடந்த 1960ல், நீலகிரியில், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை (இன்ட்கோ சர்வ்) மாநில அரசு ஏற்படுத்தியது; தற்போது, நீலகிரியில் உள்ள 15 'இன்ட்கோ' தேயிலை தொழிற்சாலைகளில், அந்தந்தப் பகுதியில் உள்ள சிறு தேயிலை விவசாயிகள் உறுப்பினர்களாகி, தங்கள் தோட்டங்களில் விளையும் பசுந்தேயிலையை, தேயிலை உற்பத்திக்கு வழங்கி வருகின்றனர். நிர்வாக சீர்கேடு, நவீனமயமாகாத தொழிற்சாலைகள், சர்வதேச சந்தையில் போட்டியிட்டு தேயிலை தூளை விற்க முடியாத நிலை உட்பட காரணங்களால், 'இன்ட்கோ' நிறுவனம் நலிவடைய துவங்கியது. 'இன்ட்கோ' தேயிலை தூளுக்கு சந்தை வசதியை ஏற்படுத்த, 2001ல், அப்போதைய அ.தி.மு.க., அரசு, 'டீ சர்வ்' என்ற பெயரில் எலக்ட்ரானிக் ஏல மையம் அமைத்தது. குன்னூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படும் தனியார் தேயிலை வர்த்தக சங்க ஏல மையத்துக்கு இணையாக, ஏல மையத்தை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன. தனியார் ஏல மையத்தை சார்ந்திருந்த 'இன்ட்கோ' தொழிற்சாலைகள், 'டீ சர்வ்' மூலம் தேயிலையை விற்று, விற்கப்படும் விலை அடிப்படையில், விவசாயிகள் வழங்கிய பசுந்தேயிலைக்கு விலை வழங்கி வருகின்றன. கடந்த 2001ல், 'ஊட்டி டீ' என்ற பெயரில் 'இன்ட்கோ சர்வ்' மூலம் தேயிலை தூள் தயாரிக்கப்பட்டு, மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்கப்படுகிறது. இருப்பினும், 'இன்ட்கோ' விவசாயிகள் வழங்கிய பசுந்தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால், மாநில அரசு, உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளுக்கு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள ஆறு தேயிலை ஏல மையங்களை ஒப்பிடுகையில், குன்னூர் 'டீ சர்வ்' ஏல மையத்தில் தான், தேயிலை தூளுக்கு குறைந்த விலை கிடைத்துள்ளது. கடந்தாண்டு (2010) குன்னூர் தனியார் ஏல மையத்தில் 1.74 கோடி கிலோ தேயிலை தூள் விற்கப்பட்டு, சராசரி விலையாக கிலோவுக்கு 66 ரூபாய், அரசின் 'டீ சர்வ்' ஏல மையத்தில் 51 லட்சம் கிலோ தேயிலை விற்கப்பட்டு, சராசரி விலையாக கிலோவுக்கு 63 ரூபாய் பெறப்பட்டது. இந்தாண்டு ஜனவரி - மே வரை, குன்னூர் தேயிலை வர்த்தக சங்க ஏல மையத்தில், 1.78 கோடி கிலோ தேயிலை தூள் விற்கப்பட்டு, சராசரி விலையாக கிலோவுக்கு 68 ரூபாய் பெறப்பட்டுள்ளது. அரசின் 'டீ சர்வ்' ஏல மையத்தில் 61 லட்சம் கிலோ தேயிலை தூள் விற்கப்பட்டு, சராசரி விலையாக கிலோவுக்கு 61 ரூபாய் பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பிற ஏல மையங்களான கொல்கத்தா மையத்தில், சராசரி விலை கிலோவுக்கு 114.88 ரூபாய், கவுகாத்தி மையத்தில் 100.76, சிலிகுரி மையத்தில் 99.57, கொச்சின் மையத்தில் 81.47, கோவை மையத்தில் 69.95 ரூபாய் விலை கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அரசு ஏல மையத்தில் தான், மிகக் குறைந்த விலை தேயிலை தூளுக்கு கிடைத்துள்ளது. சர்வதேச நிர்வாக இயல் ஆலோசகர் சுந்தர் கூறுகையில், ''இன்ட்கோ நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் 'ஊட்டி டீ'யை ரேஷன் கடைகளில் விற்பதன் மூலம் ஏழை, எளிய மக்கள் மட்டுமே வாங்குகின்றனர்; விலையும் குறைவாக உள்ளது.'ஊட்டி டீ'யின் குணநலன்களை பிரபலப்படுத்தி, பெரிய வணிக நிறுவனங்களில் விற்பதன் மூலம், பணக்கார வர்க்கத்தினரும் நீலகிரி தேயிலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும்; தேயிலை தூளின் விற்பனை அதிகரிக்கும். ராணுவ தேவைக்கு 'ஊட்டி டீ'யை கொள்முதல் செய்தால், உற்பத்தி பன்மடங்கு உயரும். மார்க்கெட்டிங் யுக்தியை மேம்படுத்தினால் மட்டுமே 'இன்ட்கோ' நிறுவனத்துக்கு லாபம் கிடைக்கும்,'' என்றார். 'இன்ட்கோ' நிறுவன முன்னாள் தலைவர் ரங்கையா கூறுகையில், ''இன்ட்கோ நிறுவன நிர்வாக மேலாளராக நியமிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தேயிலை தொழில் மீது ஆர்வமுள்ளவராகவும், நல்ல திட்டங்களை செயல்படுத்தி உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் ஆற்றல் பெற்றவராகவும் இருக்க வேண்டும். 'இன்ட்கோ' தொழிற்சாலைகளில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், அலுவலர்கள் பிற துறைகளில் இருந்து பணி மாறுதல் பெற்று வருகின்றனர்; உரிய பயிற்சி, அனுபவம் இல்லாததால், தேயிலை தொழிலை மேம்படுத்த அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. நிர்வாக ரீதியாக உள்ள குறைகளை களைந்தால் மட்டுமே 'இன்ட்கோ' நிறுவனம் தலைநிமிரும்,'' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)