மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் புதிய 'ஸ்விப்ட்' கார் அறிமுகமாகிறதுமாருதி சுசூகி இந்தியா நிறுவனம் புதிய 'ஸ்விப்ட்' கார் அறிமுகமாகிறது ... நடப்பு 2011-12ம் நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு ரூ.1.57 லட்சம் கோடியை தாண்டும் நடப்பு 2011-12ம் நிதியாண்டில் அன்னிய நேரடி முதலீடு ரூ.1.57 லட்சம் கோடியை ... ...
முன்னணி 7 நிறுவனப் பங்குகளின்சந்தை மதிப்பு ரூ.61,000கோடி வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2011
03:39

மும்பை:பங்குச்சந்தையின் வீழ்ச்சியால், 7 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 61ஆயிரம்கோடி ரூபாய் சரி வடைந்துள்ளது. அமெரிக்காவின் கடன் தகுதி மதிப்பு கடந்த வாரம் குறைக்கப்பட்டது. இதனால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் ங்குச்சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது.இதன் காரணமாக, இந்தியாவின் முன்னணி 10 நிறுவனங்களில், 7 நிறுவனப்பங்குகளின் சந்தை மதிப்பு, 61ஆயிரத்து 78கோடி ரூபாய் அளவிற்கு சரிவடைந்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த, டி.சி.எஸ் நிறுவனத்தின்சந்தை மதிப்பு 20 ஆயிரத்து 648கோடி குறைந்து, ஒரு லட்ச த்து 86ஆயிரத்து 168 ரூபாயாகசரிவடைந்துள்ளது.இதே காலத்தில், இன்போசிஸ் நிறுவனத்தின்சந்தை மதிப்பு, 12ஆயிரத்து 408கோடி குறைந்து, ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 336கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.மும்பை பங்குச்சந்தையில், டி.சி.எஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களின்சந்தை மதிப்பு, முறையே 10 மற்றும் 8சதவீதம் குறைந் துள்ளது. எண்ணெய், எரிவாயு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின்சந்தை மதிப்பு, 10 ஆயிரத்து 101கோடிசரிவடைந்து, 2 லட்ச த்து 49ஆயிரத்து 106கோடி ரூபாயாக குறைந் துள்ளது. பொதுத்துறையைசே ர்ந்தகோல் இந்தியா நிறுவனத்தின்சந்தை மதிப்பு 4,453கோடி குறைந்து, 2 லட்சத்து 43 ஆயிரத்து 369கோடி ரூபாயாக குறைந்துள்ளது.நாட்டின் தொலை தொடர்புசே வையில், தனியார் நிறுவனமான பார்தி ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின்சந்தை மதிப்பு 9,817கோடி குறைந்து, 1 லட்ச த்து 47 ஆயிரத்து 837கோடி ரூபாயாக குறைந்துள்ளது. பொதுத்துறை வங்கிகளில் முதலிடத்தில் உள்ள ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியாவின்சந்தை மதிப்பு 2,502கோடி குறைந்து, ஒரு லட்ச த்து 39ஆயிரத்து 282கோடி ரூபாயாகசரிவடைந்துள்ளது. பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், 10வது இடத்தில் இருந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியை பின்னுக்கு தள்ளி விட்டு, எச்.டீ.எப்.சிபேங்க், அந்த இடத்திற்கு முன்னேறி யுள்ளது. எனினும் எச்.டீ.எப்.சி வங்கியின்சந்தை மதிப்பு, 1,148கோடி குறைந்து, ஒரு லட்ச த்து 39 ஆயிரத்து 282கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.பங்குச்சந்தை வீழ்ச்சி கண்ட நிலையிலும், ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட 3 நிறுவனப் பங்குகளின்சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. ஓ.என்.ஜி.சி-யின்சந்தை மதிப்பு 2,738கோடி அதிகரித்து, 2 லட்ச த்து 38 ஆயிரத்து 954கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நுகர் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி நிறுவனத்தின்சந்தை மதிப்பு, 1,442கோடி அதிகரித்து, ஒரு லட்ச த்து 53 ஆயிரத்து 708கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.டி.பி.சி நிறு வனத் தின்சந்தை மதிப்பு 2,679கோடி உயர்ந்து, ஒரு லட்ச த்து 44 ஆயிரத்து 419கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 10 சதவீதம் சரிவு புதுடில்லி:நடப்பாண்டு ஜூலை மாதத்தில், நாட்டின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி, 18.30 கோடி டாலராக (824 கோடி ரூபாய்) இருந்தது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட 10 சதவீதம் (20.40 கோடி டாலர்-918 கோடி ரூபாய்) குறைவாகும்.ஐரோப்பிய நாடுகளில், ஏற்பட்டுள்ள சுணக்க நிலையால், நம் நாட்டின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி குறைந்துள்ளது என, கடல் உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால், அந்நாட்டிற்கான இதன் ஏற்றுமதியும் குறைந்து போயுள்ளது.நாட்டின் மொத்த கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில், ஐரோப்பிய நாடுகள் 26 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து, ஜப்பான் (13 சதவீதம்) மற்றும் சீனா (10 சதவீதம்)ஆகிய நாடுகள் உள்ளன.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நான்கு மாத காலத்தில், கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி 8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 64.38 கோடி டாலராக ( 2,897 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதியில், பிளாக் டைகர் இறால், நன்னீர் இறால்கள், பதப்படுத்தப்பட்ட பல் வகை மீன்கள் போன்றவை அதிகப் பங்களிப்பை கொண்டுள்ளன. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலிருந்துதான், கடல் உணவுப் பொருள்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கடந்த 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் கடல் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி, அதற்கு முந்தைய நிதியாண்டை விட, 25.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 260 கோடி டாலராக (11 ஆயிரத்து 700 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)