தொடர் வீழ்ச்சியில் பங்கு வர்த்தகம்... காணாமல் போனது காளை...தொடர் வீழ்ச்சியில் பங்கு வர்த்தகம்... காணாமல் போனது காளை... ... அன்னியச் செலாவணி கையிருப்புரூ.14.25 லட்சம் கோடி அன்னியச் செலாவணி கையிருப்புரூ.14.25 லட்சம் கோடி ...
கச்சா எண்ணெய் விலை சரிவு: பாலிமர் விலை குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2011
03:39

மும்பை:கடந்த ஒரு சில வாரங்களாக, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், அமெரிக்காவின் கடன் தகுதி குறியீடு குறைக்கப்பட்டதையடுத்தும், அந்நாட்டின் செலவிடும் வருவாய் குறைந்து போனதையடுத்தும், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 81 - 83 டாலராக சரிவடைந்துள்ளது. இதனால், கச்சா எண்ணெயில் இருந்து பிரிக்கப்படும் எரிபொருளான நாப்தா மற்றும் பாலிமர் விலை குறைந்துள்ளது.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 110 - 115 டாலராக அதிகரித்தது. இதையடுத்து, ஒரு டன் நாப்தாவின் விலை, 1,000 டாலராக மிகவும்அதிகரித்து காணப்பட்டது. இந்நிøயில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து, ஒரு டன் நாப்தாவின் விலை, 860-870 டாலராக குறைந்துள்ளது.இதைத் தொடர்ந்து, நாப்தாவிலிருந்து தயாரிக்கப்படும், குறைந்த அடர்த்தி கொண்ட பாலிமரின் விலை யும் குறைந்துள்ளது.பாலிமர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி), காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா (கெயில்), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்.ஐ.எல்) ஆகிய நிறுவனங்கள், குறைந்த அடர்த்தி கொண்ட, ஒரு கிலோ பாலிமரின் விலையில் 1.50 - 2 ரூபாய் வரை குறைத்துள்ளன. பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்த, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ்நிறுவனமும், உற்பத்தி தொடங்கி யவுடன், இதன் விலையை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாலித்திலீன் என்ற உப பொருளிலிருந்து, பிளாஸ்டிக் பைகள்,ஷீட்டுகள், விளையாட்டு பொம்மைகள், உறைகள், குழாய்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.அதிக அடர்த்தி கொண்ட பாலிபுரோப்பிலீன் என்ற உப பொருளிலிருந்து, அதிக எடையை தாங்க கூடிய சிமென்ட் பைகள், உர சாக்குகள், பிலிம்கள் மற்றும் கண்டெய்னர்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. எச்.டீ.பி.இ. என்ற உயர் அடர்த்தி கொண்ட பாலிமரிலிருந்து,பாட்டில்கள், நாற்காலிகள் மற்றும் கட்டுமான பணிகளில் பயன்படும் பிளாஸ்டிக் பலகைகள், தொலைத் தொடர்பு துறையில் பயன் படுத்தப்படும் குழாய்கள் போன்றவை தயாரிக் கப்படுகின்றன.உள்நாட்டில் மட்டுமின்றி,அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும், ஒரு டன் பாலிமரின் விலை, 60-70 டாலர் குறைந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)