பதிவு செய்த நாள்
23 ஆக2011
00:28

மும்பை: நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, ஓரளவிற்கு நன்கு இருந்தது. ஐரோப்பா மற்றும் ஒரு சில ஆசிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாக இருந்தது. இருப்பினும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள், பங்குகளில் முதலீடு செய்ததை தொடர்ந்து குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு,மின்சாரம், உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.இருப்பினும், வங்கி, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது. மத்திய அரசு, கூடுதலாக, 5 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யும் வகையில், ஆணை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், பஜாஜ் இந்துஸ்தான், பல்ராம்பூர் சின்னி மில்ஸ் போன்ற சர்க்கரை துறை நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்திருந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 200.03 புள்ளிகள் அதிகரித்து, 16,341.70 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,370.46 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,046.48 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள்,டி.எல்.எப், எச்.டீ.எப்.சி பேங்க், இன்போசிஸ், டி.சி.எஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, இந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய ஆறு நிறுவனங்கள் தவிர, ஏனைய 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 53.15 புள்ளிகள் உயர்ந்து, 4,898.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,910.05 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,808.75 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|