பதிவு செய்த நாள்
27 ஆக2011
02:47
மும்பை:டீ.டி.எச் (டைரக்ட் டு ஹோம்) சேவையில் ஈடுபட்டு வரும், வீடியோகான் டீ2எச் நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 7 லட்சத்து, 47 ஆயிரம் சந்தாதாரர்களை பெற்று, சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கை, இச்சேவையில் ஈடுபட்டு வரும் ஏனைய நிறுவனங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். வீடியோகான் டீ2எச், அதிகளவில் எச்.டி. சேனல்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது.உயர் தரமான, மதிப்பு மிக்க பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை, உரிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதற்கு பரிசாக இதை கருதுகி றோம். வாடிக்கையாளர்களுக்கு மேலும், நம்பிக்கை ஊட்டும் வகையில், அவர்களின்தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தும் செயல்பட்டு வருகிறோம் என, வீடியோகான் குழுமத்தின் இயக்குனர், சவுரப் தூத்மற்றும் வீடியோகான், டீ2எச் தலைமை செயல் அதிகாரி அனில் கேரா ஆகியோர் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|