பங்கு வியாபாரம்: சாண் ஏறினால்... முழம் சறுக்குகிறது...பங்கு வியாபாரம்: சாண் ஏறினால்... முழம் சறுக்குகிறது... ... அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய மருந்து சந்தை மதிப்பு ரூ. 1 லட்சம்கோடியாக உயரும் அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய மருந்து சந்தை மதிப்பு ரூ. 1 லட்சம்கோடியாக ... ...
நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் - ஜூலை மாத காலத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 22 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2011
03:47

மும்பை:நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்தில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 21.8 சதவீதம் குறைந்து, 26 ஆயிரத்து, 795கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 34 ஆயிரத்து, 249கோடி ரூபாயாக இருந்தது. காப்பீட்டு ஒழுங்குமுறைமேம்பாட்டு ஆணையம் (இரிடா), வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான 4 மாதங்களில், பொதுத்துறையைசேர்ந்த லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி) நிறுவனத்தின் பிரிமியம் வருவாய் 20.5 சதவீதம் குறைந்து, 24 ஆயிரத்து, 431கோடி ரூபாயில் இருந்து, 19 ஆயிரத்து, 407கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே காலத்தில், தனியார் துறையைசேர்ந்த, 22 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய், 25 சதவீதம் குறைந்து 9,818கோடி ரூபாயில் இருந்து, 7,388கோடி ரூபாயாக குறைந்துள்ளது.ஏப்ரல் - ஜூன் வரையிலான முதல் காலாண்டில், பிரிமியம் வருவாய் 28 சதவீதம் குறைந்துள்ளது.எனினும், பொது மற்றும் தனியார் துறையைச்சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், சென்ற ஜூலை மாதம் 41 சதவீதம் உயர்ந்து, 8,511கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில் 6,023கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் - ஜூலை வரையிலான 4 மாதங்களில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வரு வாய் குறைந்துள்ளபோதிலும், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய், இதே காலத்தில் உயர்ந் துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், பொது காப்பீட்டு துறையைச்சேர்ந்த நிறுவனங்களின் பிரிமிய வருவாய், 21.38 சதவீதம் உயர்ந்து, 18 ஆயிரத்து, 646கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 15 ஆயி ரத்து, 361கோடி ரூபாயாக இருந்தது. பொதுக் காப்பீட்டுத் துறையில், பொதுத்துறை நிறுவனங்களின்பிரிமிய வருவாய், நடப்பு நிதியாண்டில், சென்ற ஜூலை மாதத்துடன் முடிவடைந்த 4 மாதங்களில், 19.21 சதவீதம் வளர்ச்சி கண்டு,10 ஆயிரத்து,671கோடி ரூபாயாக உயர்ந் துள்ளது.இது,சென்ற நிதியாண்டின், இதே காலத்தில் 8 ஆயிரத்து, 952கோடி ரூபாயாக இருந்தது.இதே காலத்தில், தனியார் துறையைசேர்ந்த பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமியம், 24.42 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7,975கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாண்டின், இதே காலத்தில், 6,410கோடி ரூபாயாக இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)