உலகளவில் தேயிலை உற்பத்தி 88.51 கோடி கிலோவாக குறைந்ததுஉலகளவில் தேயிலை உற்பத்தி 88.51 கோடி கிலோவாக குறைந்தது ... எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு தங்க முதலீட்டு திட்டம் எஸ்.பீ.ஐ. மியூச்சுவல் பண்டு தங்க முதலீட்டு திட்டம் ...
நடப்பு 2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில் முக்கிய துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 7.8 சதவீதமாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2011
00:16

புதுடில்லி: நடப்பாண்டு ஜூலை மாதத்தில், முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 5.7 சதவீதம் என்றளவில் குறைந்து காணப்பட்டது. இது, சென்ற ஜூன் மாதத்தில், 5.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.முக்கிய எட்டு துறைகளில் மின்சாரம், உருக்கு பொருட்கள், சிமென்ட் ஆகிய துறைகளின் உற்பத்தி அதிகரித்ததையடுத்து, ஒட்டு மொத்தமாக முக்கிய துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது.முக்கிய எட்டு துறைகளின் கீழ், கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், இயற்கை எரிவாயு, உரங்கள், நிலக்கரி, மின்சாரம், சிமென்ட்மற்றும் விற்பனைக்கான உருக்கு பொருட்கள் ஆகியவை, இடம் பெற்றுள்ளன. தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண், கணக்கீடு செய்வதற்கு, மேற்கண்ட துறைகளின் பங்களிப்பு, 37.90 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சென்ற ஜூலை மாதத்தில், மின்சாரம், உருக்கு பொருட்கள், சிமென்ட் ஆகிய மூன்று துறைகளின் உற்பத்தி வளர்ச்சி முறையே, 13 சதவீதம், 15.5 சதவீதம், மற்றும் 10.6 சதவீதம் என்ற அளவில் இருந்ததாக தற்காலிக புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு, ஜூலை மாதத்தில், மின்சாரத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.2 சதவீதம் என்றளவிலும், உருக்கு பொருட்கள் மற்றும் சிமென்ட் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, 2.9 சதவீதம், 0.2 சதவீதம் என்றளவிலும்மிகவும் குறைந்து காணப்பட்டது.கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி வளர்ச்சி, சென்ற ஜூலை மாதத்தில், 1.4 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு இதே மாதத்தில், இத்துறையின் உற்பத்தி வளர்ச்சி, 15.8 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது.இதே போன்று, பெட்ரோலிய சுத்திகரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சியும் இதே மாதங்களில், 13.7 சதவீதம் என்றளவிலிருந்து, 3.9 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது.இயற்கை எரிவாயு மற்றும் உரத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, முறையே 8.2 சதவீதம் மற்றும் 1.6 சதவீதம் என்றளவில் இருந்தது.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதக் காலத்தில், முக்கிய தொழில் துறைகளின், உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 6.5 சதவீதம் என்றளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)