பதிவு செய்த நாள்
04 செப்2011
14:03
வாஷிங்டன்:அமெரிக்காவில் வேலைவாய்ப்பற்றோரின் எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை என அந்நாட்டு அரசின் வேலைவாய்ப்புத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதங்களில் வேலை வாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றங்களும் உண்டாகவில்லை. இதனால் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் பூஜ்யம் என்ற அளவில் காணப்பட்டது.அதேசமயம் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களும் வேலைவாய்ப்பின்மையை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.ஜூலை மாதத்தில் இதன் விகிதம் 1.56 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து 28 மாதங்களாக வேலையின்மை விகிதம் 9 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான அளவிலேயே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்பு குறைந்து வருவது ஒரு புறம் இருக்க இவர்களுக்கு வங்கிகள் அளித்த கடன்கள் திரும்ப வசூலிக்க முடியாததால் வங்கிகள் திவால் ஆவதும் தொடர்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|