இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வுஇந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு ... மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு மூன்று மயில்கள் கொண்ட அரிய 10 ரூபாய் நோட்டு ...
நாடு முழுவதும் நிலக்கரி, தொழில்நுட்ப கருவிகள் தட்டுப்பாடு: கூடுதல் மின் உற்பத்தி பாதிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2011
10:59

சென்னை: இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில், புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படுவதால், நிலக்கரி மற்றும் தொழில்நுட்ப கருவிகளுக்கு, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழக புதிய மின் திட்டப் பணிகள் முடியும் காலமும் தாமதமாகிறது. இந்தியாவில், மின்தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால், அனைத்து மாநிலங்களிலும், புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில், தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, அசாம், ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில், 1.60 லட்சம் மெகாவாட் திறனில், புதிய மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதில், ஆந்திராவில், 23,500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்களும், தமிழகத்தில், 20,600 மெகாவாட் திறன் மின்நிலையங்களும் அமைக்கப்படுகின்றன. தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தேசிய அனல்மின் கழகம் ஆகியவையும், தனியார் தொழிற்சாலை நிறுவனங்களும், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களும் தமிழகத்தில், 300 இடங்களில் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கின்றன. ஒரே நேரத்தில், அனைத்து மின் நிலையங்களும் கட்டப்படுவதால், தொழில் நுட்பக் கருவிகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், நிலக்கரி தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட, அனைத்து மாநிலங்களின் மின் திட்டங்களுக்கும், தேவையான நிலக்கரி கிடைப்பதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களின் நிலக்கரி தேவையில், 75 சதவீதத்தை தான், மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், 25 சதவீத நிலக்கரி பற்றாக்குறைக்கு, மாநிலங்கள் தள்ளப்பட்டுள்ளன. ஆனாலும், இதில் சோதனை மேல் சோதனையாக, மத்திய அரசு ஒதுக்கிய நிலக்கரியில், 50 சதவீதத்தை மட்டுமே தர முடியும் என, கோல் இந்தியா நிறுவனமும், நிலக்கரி சுரங்கங்களும் கூறியுள்ளன. இதனால், மொத்தமுள்ள நிலக்கரி தேவையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும், 38 சதவீதம் மட்டுமே, மத்திய அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், 43.10 கோடி டன் நிலக்கரி, கடந்த ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டு, மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போதைய தட்டுப்பாட்டால், அனைத்து மாநிலங்களும், ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளிலிருந்து, கூடுதல் நிலக்கரி இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளன. தமிழகத்திலும், 50 சதவீத நிலக்கரி தேவைக்கு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக மின்வாரிய உற்பத்தி பிரிவு உயரதிகாரி கூறியதாவது: தமிழகத்தில், பல புதிய மின் நிலையங்கள் கட்டப்படுகின்றன. இதனால், கூடுதல் மின் உற்பத்தி கிடைக்கும் என்றாலும், நிலக்கரி பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது, கட்டப்படும் புதிய மின் நிலைய பணிகள், பல காரணங்களால் காலதாமதமாகியுள்ளன. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள 'பெல்' (பாரத் மிகுமின் நிறுவனம்) நிறுவனம், ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும், நூற்றுக்கணக்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து மின் நிலையங்களும் ஒரே நேரத்தில் நடப்பதால், தொழில்நுட்ப கருவிகள் சப்ளையில் தாமதமாகிறது. பாய்லர், டர்பைன், பம்புகள், ஜெனரேட்டர், வால்வு, பில்டர் என, பல்வேறு தொழில்நுட்ப கருவிகள், ஒரே நேரத்தில், அனைத்து மின் நிலையங்களுக்கும் தேவைப்படுவதால், புதிய மின் நிலைய பணிகள் சுணக்கமாகியுள்ளது. எனவே, திட்டமிட்ட காலத்தை விட, குறைந்தது ஆறு மாத காலம் தாமதமாக தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)