பதிவு செய்த நாள்
08 செப்2011
04:43
சென்னை : ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனத்தின் கீழ் செயல்படும், ஸ்ரீராம் கிரெடிட் கம்பெனியில் (ஸ்ரீராம் சி.சி.எல்.,), அமெரிக்காவைச் சேர்ந்த லீப்பிராக் நிறுவனம், 67 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இது குறித்து, ஸ்ரீராம் கேப்பிட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜி.எஸ்.சுந்தரராஜன் கூறியதாவது: நிறுவனம், நிதி சார்ந்த வர்த்தகத்தில், 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. குறைந்த வருமான பிரிவினருக்கு நிதி உதவி அளிக்கும் நடவடிக்கைகளுக்கு, முன்னுரிமை தந்து, செயல்பட்டு வருகிறது. இந்நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், லீப்பிராக் நிறுவனத்திடமிருந்து, 67 கோடி ரூபாய் முதலீடாக பெறப்பட்டுள்ளது. இத்தொகை, ஸ்ரீராம் சி.சி.எல்., நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும், மூன்று நிறுவனங்களான, ஸ்ரீராம் பார்சூன், ஸ்ரீராம் இன்சைட் மற்றும் ஸ்ரீராம் வெல்த் மேனேஜ்மென்ட் ஆகிய நிறுவனங்களின் கிளைகள் மற்றும் வர்த்தக விரிவாக்க திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இவ்வாறு சுந்தரராஜன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|