பதிவு செய்த நாள்
09 செப்2011
15:10
பதுடில்லி: ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் டீசல் வகை கார்களில் இரண்டு புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்த கிரிலோஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து இடியோஸ், லிவாஸ் என்ற பெயரில் இரண்டுவகையான கார்களை அறிமுகப்படுத்தப்படுத்துகிறது. இதில் இடியோஸ் வகை கார்களின் விலை 5லட்சத்து 54 ஆயிரமாகவும், லிவா வø க கார்களின் விலை 7.87 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டொயோட்டா-கிரிலோஸ்கர் மோட்டார் (டிகே எம்)என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் சார்பில் ஆண்டு ஒன்றிற்கு 63 ஆயிரம் கார்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இடியோஸின் பெட்ரோல் வகை கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் அதன் இன்ஜின் வடிவமைப்பில் சிறு மாற்றம் செய்து டீசல்வகைகாராக மாற்றப்பட்டுள்ளது என்றும் இந்த வகை கார்களும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்ப்பதாக டிகேஎம் நிர்வாக இயக்குனர் ஹிரோஷி நககாவா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|