இந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 230 கோடி டாலராக சரிவுஇந்திய நிறுவனங்களின் அன்னிய நேரடி முதலீடு 230 கோடி டாலராக சரிவு ... மகிந்திரா நிறுவனம்புதிய பொலேரோ கார் அறிமுகம் மகிந்திரா நிறுவனம்புதிய பொலேரோ கார் அறிமுகம் ...
ஏப்ரல் - ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில்உள்நாட்டில் வாகன விற்பனை 13.26 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2011
00:25

புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், ஒட்டுமொத்த அளவில், உள்நாட்டில் வாகன விற்பனை 13.26 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 11.85 சதவீதம் என்ற அளவில் இருந்தது.வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு மற்றும் நாட்டின் கார் தயாரிப்பில், முன்னணியில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் கார்கள் உற்பத்தி குறைந்து போனது போன்றவற்றால், சென்ற ஆகஸ்ட் மாதத்தில் கார்கள் விற்பனை 10.08 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 ஆக உள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 1 லட்சத்து 60 ஆயிரத்து 713 என்ற எண்ணிக்கையில் இருந்தது என, இந்திய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்), நேற்று வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 15.43 சதவீதம் வளர்ச்சி கண்டு, 7 லட்சத்து 27 ஆயிரத்து 542 என்ற எண்ணிக்கையிலிருந்து, 8 லட்சத்து 39 ஆயிரத்து 772 ஆக உயர்ந்துள்ளது. இதே மாதங்களில், இருசக்கர வாகனங்கள் விற்பனை, 16.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9 லட்சத்து 57 ஆயிரத்து 236 என்ற எண்ணிக்கையிலிருந்து, 11 லட்சத்து 11 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது. இதே மாதங்களில், வர்த்தக வாகனங்கள் விற்பனை, 22.62 சதவீதம் உயர்ந்து, 52 ஆயிரத்து 394லிருந்து, 64 ஆயிரத்து 248 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த வாகனங்கள் விற்பனை, 11.85 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12 லட்சத்து 63 ஆயிரத்து 239லிருந்து, 14 லட்சத்து 12 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வாகனங்கள் உற்பத்தி, 15.92 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 12.67 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதே ஐந்து மாத காலத்தில், உள்நாட்டில் வாகன விற்பனை, 13.26 சதவீதம் அதிகரித்துள்ளது. பயணிகள் வாகன விற்பனை, 1.94 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், பயணிகள் கார்கள் விற்பனை, 1.26 சதவீதம் குறைந்துள்ளது. பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை, 8.70 சதவீதம் என்ற அளவிலும், வேன்கள் விற்பனை, 21.06 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த வர்த்தக வாகனங்கள் விற்பனை, ஏப்ரல்-ஆகஸ்ட் மாத காலத்தில், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 17.80 சதவீதம் உயர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் விற்பனை, 7.07 சதவீதம் என்ற அளவிலும், இலகு ரக வர்த்தக வாகனங்கள் விற்பனை, 27.44 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளது.இதே காலத்தில், மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 0.27 சதவீதம் என்ற அளவிலும், பயணிகள் வாகனங்கள் விற்பனை, 4.17 சதவீதம் என்ற அளவிலும் பின்னடைவைக் கண்டுள்ளன. இதே ஐந்து மாத காலத்தில், இருசக்கர வாகனங்கள் விற்பனை, 15.94 சதவீதம் அதிகரித்துள்ளது. இப்பிரிவில், மொபட்டுகள், ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை வளர்ச்சி முறையே, 13.64 சதவீதம், 17.75 சதவீதம் மற்றும் 15.71 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.ஏற்றுமதி: நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வாகனங்கள் ஏற்றுமதி, சென்ற ஆண்டின் இதே காலத்தை விட, 30.93 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பயணிகள் கார்கள் ஏற்றுமதி, 22.44 சதவீதம் என்ற அளவிலும், இருசக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் ஏற்றுமதி முறையே 30.04 சதவீதம், மற்றும் 50.11 சதவீதம் என்ற அளவிலும் உயர்ந்துள்ளன.சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ஒட்டுமொத்த வாகனங்கள் ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே மாதத்தை விட, 36.13 சதவீதம் உயர்ந்துள்ளது என, சியாம் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)