பதிவு செய்த நாள்
16 செப்2011
03:29

சென்னை : இணையதளத்தில் தமிழ் மொழியில் செய்திகளை வழங்குவதற்காக "தினமலர்' நாளிதழுடன் யாஹூ இந்தியா நிறுவனம் கூட்டு கொண்டுள்ளது. இது குறித்து யாஹூ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண் டடங்கி கூறியதாவது: இணையதள பயன்பாட்டில், யாஹூ இந்தியாவின் பங்களிப்பு 80.6 சதவீதமாக உள்ளது. இதில், செய்திகள், திரைப்படங்கள்,கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அம்சங்கள் முக்கியமாக உள்ளன. தற்போது, இணையதளத்தில் பிராந்திய மொழிகளில் செய்திகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பது அதிகரித்து வருகிறது.இதனை அறிந்து நிறுவனம், இணையதள செய்திகளை, தமிழ்வழியில் அறிந்து கொள்ளும் வகையில், தமிழ்.யாஹூ.காம் என்ற பெயரில் புதிய வலைத்தளத்தை தொடங்கியுள்ளது. இதற்காக, "தினமலர்' நாளிதழுடன் கூட்டு கொண்டுள்ளோம். இதன் மூலம், தரமான செய்திகளையும், பதிப்பு வலிமை யையும், அவர்களின் அனுபவத்தையும் பயன்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. நடப்பாண்டில், மேலும், 6 பிராந்திய மொழிகளில் இணையதளத்தை தொடங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அருண் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|