இணையதளத்தில் செய்திகள் : தினமலருடன் யாஹூ இந்தியா கூட்டுஇணையதளத்தில் செய்திகள் : தினமலருடன் யாஹூ இந்தியா கூட்டு ... பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்வு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்வு ...
நடப்பு கரீப் பருவத்தில் நெல் உற்பத்தி 8.70 கோடி டன்னாக உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2011
03:30

புதுடில்லி : நடப்பு 2011-12ம் ஆண்டு கரீப் பருவத்தில், நெல் உற்பத்தி, 8.70 கோடி டன்னாக உயரும் என்று வேளாண் அமைச்சகத்தின், முன்கூட்டிய மதிப்பீட்டின் முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, 2010-11ம் ஆண்டு கரீப் பருவத்தில் 8.06 கோடி டன்னாக இருந்தது. டில்லியில் தொடங்கியுள்ள ரபி பயிர் மாநாட்டில் பங்கேற்ற மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார், நடப்பு கரீப் பருவத்தின் முதல் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டார். அதில், நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி, 36 லட்சத்து 80 ஆயிரம் டன் அதிகரித்து 12.38 கோடி டன்னாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற நிதியாண்டிற்கான நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டில், மொத்த உணவு தானியங்கள் உற்பத்தி 12.02 கோடி டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது என, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, பருப்பு வகைகள் உற்பத்தி சிறப்பாக உள்ளது. எனினும், பருப்பு இறக்குமதி செலவு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையவில்லை. கடந்த கோடை காலத்துடன் ஒப்பிடும் போது, இவ்வாண்டு கோடை காலத்தில் பருப்பு வகைகள் உற்பத்தி 71 லட்சத்து 21ஆயிரம் டன் என்ற அளவில் இருந்து, 64 லட்சத்து 30ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. கரீப் பருவத்தில் ஜூன் -ஜூலை மாதங்களில் விதைப்பு பணிகள் நடைபெற்று, செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நெல் அறுவடை நடைபெறும். கடந்த ஆண்டு, கரீப் மற்றும் ரபி பருவங்களில் மொத்தம் 9 கோடியே 53 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது. நடப்பு 2011-12ம் ஆண்டு பயிர் பருவத்தில் (ஜூலை - ஜூன்), 10 கோடியே 20 லட்சம் டன் நெல் உற்பத்தி மேற்கொள்ள மத்திய வேளாண் அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த 8 சதவீத உயர்வு, கூடுதல் ஏற்றுமதிக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரீப் பருவத்தில் பருப்பு வகைகளின் உற்பத்தி 64 லட்சத்து 30 ஆயிரம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதே காலத்தில், சோயாபீன் உற்பத்தி 1 கோடியே 25 லட்சம் டன்னாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக உணவு தானியங்கள் உற்பத்தி 15-20 சதவீதம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி, நடப்பு கோடை காலத்தில் 2 கோடியே 9 லட்சம் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டு கோடை காலத்தில் 2 கோடியே 8 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. வரும் 2011-12ம் ஆண்டு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), நாட்டின் சர்க்கரை உற்பத்தி, சென்ற ஆண்டை விட சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 2 கோடியே 60 லட்சம் டன் என்ற அளவிற்கு உயர்ந்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை, பொது உரிம அடிப்படையில் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு 2011-12ம் ஆண்டு கரீப் பருவத்தில், நாட்டின் கரும்பு உற்பத்தி 34 கோடியே 22 லட்சம் டன்னாக இருக்கும் என்று முதலாம் முன்கூட்டிய மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற 2010-11ம் ஆண்டு கரீப் பருவத்தில் 33 கோடியே 91 லட்சம் டன்னாக இருந்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்கள், ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை30-70 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. டில்லியில் இன்று நடைபெறும் இறுதி நாள் மாநாட்டில், இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம் வெள்ளி சந்தை செப்டம்பர் 16,2011
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 16,2011
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)