சர்வதேச நிலவரங்களால்  தங்கம் விலை தொடர்ந்து சரிவுசர்வதேச நிலவரங்களால் தங்கம் விலை தொடர்ந்து சரிவு ... "சென்செக்ஸ்' 111 புள்ளிகள் வீழ்ச்சி "சென்செக்ஸ்' 111 புள்ளிகள் வீழ்ச்சி ...
மலபார் கோல்டு: சென்னையில் புதிய கிளை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2011
02:30

சென்னை:தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் மலபார் கோல்டு நிறுவனம், சென்னையில் அதன் முதல் கிளையை தொடங்குகிறது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் எம்.பி. அஹமத் கூறியதாவது:அழகான மற்றும் நவநாகரிக நகைகளை, வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் பார்த்து தேர்வு செய்யும் வகையில், இப்புதிய கிளை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர், வடக்கு உஸ்மான் சாலையில், 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இப்புதிய ஷோரூம், வரும் அக்., 2ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. நிறுவனத்தின் 61வது கிளையாக அமையவுள்ள இந்த புதிய ஷோரூமில், தற்போதைய தலைமுறையினருக்கு ஏற்ற வகையில், பாரம்பரியமும், நவீனமும் கலந்து, கைவினை கலைஞர்களை கொண்டு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட "எத்தினிக்' நகைகள் இடம் பெறுகின்றன. மேலும், பழங்கால நடனங்கள் மற்றும் சிற்பங்களின் வடிவங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட "டிவைன்,' "ஏரா' என்ற ஜொலிக்கும் வைர நகை தொகுப்புகளுடன் மேலும் பல நவீன தங்க நகைகளும் இப்புதிய ஷோரூமில் கிடைக்கும்.நிறுவனம், அடுத்த மூன்று நிதியாண்டுகளுக்குள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், புதிதாக 20 கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அஹமத் கூறினார். இப்புதிய ஷோரூம் குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஷெர் கூறுகையில், "சர்வதேச தரத்திற்கு நிகராக இப்புதிய ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விற்கப்படும் ஒவ்வொரு நகையும், பி.ஐ.எஸ். 916 (தங்கநகை), ஐ.ஜி.ஐ., சான்றிதழ்(வைர நகை), பி.ஜி.ஐ., சான்று (பிளாட்டினம் நகை) பெற்றவை. வாடிக்கையாளர்கள் நகைகளின் உண்மைத் தன்மையை உடனுக்குடன், நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில், "கேரட் அனலைசர்' சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு விற்கும் ஒவ்வொரு நகைக்கான விலைப்பட்டியலும் வெளிப்படைத் தன்மை கொண்டதாக விளங்கும். வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன. இங்கு வாங்கும் நகைகளில், கற்களை பொருத்துவது உள்ளிட்ட பழுதுபார்ப்பு சேவைகளை, வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறும் வசதி, வாங்கிய நகைகளை, விற்பனை செய்யும் போது, அன்றைய விலையில் திரும்ப வாங்கிக் கொள்வதற்கான உத்தரவாதம் ஆகியவை வழங்கப்படும்' என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் செப்டம்பர் 27,2011
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 27,2011
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)