விலை உயர்வால் பெட்ரோல் பயன்பாடு குறைகிறதுவிலை உயர்வால் பெட்ரோல் பயன்பாடு குறைகிறது ... இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் ...
டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சியால் ஏற்றுமதியாளர்களுக்கு லாபம், இறக்குமதியாளர்களுக்கு இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2011
02:38

சென்னை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, 28 மாதங்களில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால், ஐ.டி. உள்ளிட்ட ஏற்றுமதி சார்ந்த துறையினரின் வருவாய்அதிகரித்துள்ளது. அதே சமயம், நிலக்கரி, கச்சா எண்ணெய்உள்ளிட்ட முக்கிய பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் இழப்பை சந்தித்துள்ளன. சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், உலக கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்ற வியாழனன்று ஒரு டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 49 ரூபாய்60 காசுகளாக குறைந்தது. அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், ஒரு கட்டத்தில் டாலரின் மதிப்பு 50 ரூபாயை தாண்டியது. டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவது கவலையளிப்பதாக உள்ளது என, இறக்குமதியாளர்கள் தெரி வித் தனர். எனினும், டாலரில் கடன் பெற்றுள்ள நிறுவனங்கள், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில், ரூபாய் மதிப்பு உயரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.மென்பொருள் ஏற்றுமதி மற்றும் சேவையில் ஈடுபட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் (ஐ.டி), டாலர் மதிப்பு உயர்ந்து வருவதால் பயன டைந்துள்ளன. ஐ.டி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐ.டி.துறையை பொறுத்தவரை, ரூபாயின் மதிப்பு, ஒரு சதவீதம் வீழ்ச்சி கண்டாலும்,எழுச்சி அடைந்தாலும், அதன் தாக்கம் 0.30 சதவீதம் என்ற அளவில் இருக்கும். ரூபாய்மதிப்பின் ஏற்ற,இறக்கத்தினால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கான தற்காப்பு கொள்கையை நாங்கள் பின்பற்றி வருகிறோம். இதன்படி, அடுத்த ஓராண்டிற்கு முன்கூட்டியே ஒப்பந்தத்தின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்கிறோம். சென்ற ஜூன் மாத நிலவரப்படி, எங்கள் வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 47 ரூபாயாக உள் ளது. தற்போதைய ரூபாய்மதிப்பின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில், ஒரு டாலருக்கான விலை சராசரியாக 46 ரூபாய்முதல் 48 ரூபாய்வரை இருக்கும்' என்று தெரிவித்தார்.பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் அவற்றின் தற்காப்பு கொள்கைப்படி, மொத்த டாலர் வருவாயில் 50 சதவீதத்தை அடுத்த ஓராண்டு விலையின் அடிப்படையில் முன்கூட்டியே ஒப்பந்தம் செய்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சியால், சிறப்பு வகை நிலக்கரி (கோக்கிங் கோல் இறக்குமதியை சார்ந்துள்ள உருக்கு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்.,), டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 11.4 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், சிறப்பு வகை நிலக்கரியின் விலையும் 15-40 சதவீதம் வரை குறைந்துள்ளது. "ஆனால், இது தற்காலிக சரிவுதான். தற்காப்பு கொள்கைப்படி, நீண்ட கால அடிப்படையில், அதாவது 5 ஆண்டுகளுக்கான முன்கூட்டிய ஒப்பந்தத்தின் உயர்மதிப்பு, 5 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைந்துள்ளதே இதற்கு சான்று' என பெயர் குறிப்பிட விரும்பாத உருக்கு நிறுவன உயரதிகாரி ஒருவர் கூறினார். மின்துறையை சேர்ந்த நிறுவனங்கள், ஓராண்டிற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், தற்போது ரூபாய்மதிப்பு குறைந்து வருவதையடுத்து, தற்போது இந்நிறுவனங்கள், காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் நிலக்கரி இறக்குமதி மேற்கொள்வதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வெளியிட்டு வருகின்றன.கோல் இந்தியா நிறுவனம், அயல்நாட்டு நிறுவனங்களிடம் பத்தாண்டு கால அடிப்படையில் நிலக்கரியை இறக்குமதி செய்து கொள்ளவும், அதே சமயம், நிலக்கரி விலையை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது தொடர்பாகவும், ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய அசாதாரணமானசூழலில், டாலர் அடிப்படையில் கடன்களை பெற்ற நிறுவனங்கள் பொறுத் திருந்து செயல்பட முடிவு செய்துள்ளன. சென்ற ஜூன் மாத நிலவரப்படி, பொதுத்துறையை சேர்ந்த செயில் நிறுவனத்தின் கடன் 21 ஆயிரத்து 176 கோடி ரூபாய்என்ற அளவில் உள்ளது. இதில், அன்னியச் செலாவணி யிலான கடன் 892 கோடி ரூபாயாக உள்ளது.சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி இந்நிறுவனம் இறக்குமதி மேற்கொண்ட வகையில் அயல் நாட்டு நிறுவனங்களுக்கு, 15 ஆயிரத்து 540 கோடி ரூபாய்தர வேண்டியுள்ளது. நுகர்பொருள் துறையை சேர்ந்த கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம், அயல்நாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துவதற்காக, அதிக அளவில் டாலர் அடிப்படையிலான கடன்களை வாங்கியுள்ளது.எனினும், இந்த கடன்கள் 5 முதல் 6 ஆண்டு காலத்தில் திரும்ப அளிக்கக் கூடியவை என்பதால், டாலர் மதிப்பு உயர்வால் பாதிப்பு ஏதுமில்லை என இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். கரன்சி மதிப்பில் ஏற்படும் ஏற்ற,இறக்கங்களை கண்காணித்து அதற்கேற்ப, செயல் திட்டங்களை வகுப்பதற்காக, பல நிறுவனங்கள், தனி குழுவை அமைத்துள்ளன. ஆனால் இக்குழுக்கள், தற்காலிக நிலையை சமாளிக்கத்தான் ஆலோசனைகளை வழங்க முடியுமே தவிர, நீண்ட கால அடிப்படையில், செயல் திட்டங்களை வகுப்பது நடைமுறைக்கு உதவாது என்று இத்துறையை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்துள்ளதால், இந்தியாவின் வெளிநாட்டு கடன்சுமை (அசல்+வட்டி) 200 கோடி டாலர் (10 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)