பதிவு செய்த நாள்
28 செப்2011
12:30
பெங்களுரூ: முன்னணி ராணுவ பாதுகாப்பு விமான தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் 10 ஆண்டுகளில் 6 பி்ல்லியன் டாலர் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே ஹால், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவுக்கு தேவையான செயற்கைக்கோள் ஏவுவதற்கான வாகனங்களில் பொருத்தப்படும் உபகரணங்களை தயாரித்து வருகிறது. அத்துடன் ராணுவ ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களையும் வடிவமைத்து வருகிறது. இது குறித்து ஹால் நிறுவனத்தின் தலைவர் அசோக்நாயக் கூறியுள்ளதாவது: ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் போன்றவற்றின் உதிரிபாகங்கள் தயாரிப்பதில் உலகம் முழவதும் உள்ள 20 முன்னணி நிறுவனங்களி்ல் ‘ ஹால்’ நிறுவனமும் ஒன்று . 14 விதமான விமானங்கள் தயாரிப்பு, உற்பத்தி பிரிவில் 19, ஆராய்ச்சி பிரிவில் 10 மையங்கள் என சாதனை படைத்து வருகிறது. வரும் 10 ஆண்டுகளில் இத்துறையின் வாயிலாக 6 பில்லியன் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதுஎன்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|